நந்திக்கடல் பெருங்கடலுடன் சங்கமம்!

நந்திக்கடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நந்திக்கடல் நீர்மட்டம் உயர்வடைந்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம், நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்ததால், வட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

எனவே நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற மணல் திடலை வெட்டி அகற்றி, நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைத்து நந்திக்கடலின் நீர்மட்டத்தை குறைக்குமாறு விவசாயிகளும், வட்டுவாகல் பகுதி மக்களும் உரியவர்களிடம் கோரியிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினுடைய அனுமதியுடன், சம்பிரதாய பூர்வமாக பூசை வழிபாடுகளுடன், நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.