இன்றைய ராசிபலன் 04.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

image_pdfimage_print

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷராசி அன்பர்களே!

தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்

ரிஷபராசி அன்பர்களே!

சகோதரர்கள் முக்கியமான விஷயத்தில் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய டிசைனில் நவீனரக ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும், அலுவல கத்தில் சற்று இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களும் ஏற்படக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடகராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். அலுவலகப் பணிகளில் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சிம்மராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கன்னிராசி அன்பர்களே!

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் வழக்க மான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

விருச்சிகராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சியை இன்று தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களைச் சந்தித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபா ரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரும். அலுவலகத்தில் நீண்டநாளாக எதிர் பார்த்த சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரி கள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு வீண் அபவாதம் ஏற்படக்கூடும். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் செலவுகள் ஏற்படும், வியாபாரத்தில் பங்குதாரர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

இன்று எந்த விஷயத்திலும் சற்று நிதானத்துடன் செயல்படவேண்டிய நாள். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் அனுகூ லம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.