எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம்! உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

சஜித் பிரேமதாஸ!

எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார். இது தொடர்பான முரண்பாடுகளை விரைவில் தீர்க்க கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும். அதன் பின்னரே சஜித் உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெறுவார்.