யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவன்! காங்கேசன்துறை கடலில் அ டித்துச் செல்லப்பட்ட பரி தாபம் !

image_pdfimage_print

யாழ்ப்பாணம்!

காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் கடலில் அ டித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பகுதியில் இருந்து காங்கேசன்துறை, தல்செவன கடற்பகுதிக்கு சென்றிருந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு அ டித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மாத்தறை – தெனியாய பிரதேசத்தை சேர்ந்த செல்வநாயகம் அலெக்சென்டர் (21-வயது) என்ற இளைஞரே கா ணாமல் போயுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மற்றும் தெனியாய பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய முதல் மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.