கொட்டித் தீர்த்த கனமழை! இரணைமடுக் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு- பொது மக்களுக்கு எச்சரிக்கை!

image_pdfimage_print

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தொடர்ச்சியாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வட பகுதிகளிலும் அதிகளவான மழை பதிவாகியுள்ளது.

கிளிநொச்சியில் கொட்டித் தீர்த்த மழையினால் ஆயிரக் கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 34 அடி 1அங்குலமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குளத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் அக்குளத்தின் கீழ் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.