முத்துஐயன்கட்டு ஜீவநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 09 குடும்பங்கள் இடப்பெயர்வு!

வெள்ள அனர்த்தம்!

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு ஜீவநகர் பகுதியில் வெள்ளநிலைமை காணபடுவதால் தாழ்வானபகுதியில் வசித்துவருகின்ற 9 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் (9 ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ளடங்கலாக) இதுவரை உழவுஇயந்திரம் மூலம் அழைத்துவரபட்டு முத்துஐயன்கட்டு இடதுகரை பாடசாலையில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடனடியா தேவைபட்ட நுளம்புவலை, நிலவிரிப்பு (பாய்), பெட்சீட் என்பன இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உணவு தொடர்பான விடயங்களை மாவட்ட அனர்த்த நிவாரணசேவைகள் பிரிவு மேற்கொண்டுள்ளது.