முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வருகை தந்த இராணுவமும், கடற்படையினரும், குமுழமுனை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தற்போது மீட்பு பணியை மேற்கொள்ள படகு மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி விடயத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவும், சம்பந்தப்பட்ட அமைச்சும் கருத்திலெடுத்து துரித பணியை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டு நிற்கின்றனர்.
கடந்த வருடமும் முல்லைத்தீவு நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதியில் அனர்த்தத்தில் சிக்கியிருந்த மக்களை விமானத்தின் மூலம் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




