முல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின! அதிகம் பகிருங்கள், யாராவது உதவக்கூடும்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (5) இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக கிராமங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன . இதன் காரணமாக பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், இதுவரை 9 ஆயிரத்து 297 குடும்பங்களை சேர்ந்த 30 ஆயிரத்து 020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லர் பிரி­வில் 63 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 142 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மாந்தை கிழக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 158 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 515 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வில் 169 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 509 பேர் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­லர் பிரி­வில் 8 ஆயி­ரத்து 899 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 28 ஆயி­ரத்து 831 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். வெலிஓயா பிர­தேச செய­லர் பிரி­வில் 8 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 23 பேர் வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உடனடியா தேவைபட்ட நுளம்புவலை, நிலவிரிப்பு (பாய்), பெட்சீட் என்பன இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவு தொடர்பான விடயங்களை மாவட்ட அனர்த்த நிவாரணசேவைகள் பிரிவு மேற்கொண்டுள்ளது.

அத்துடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர்,
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிர் சேதங்கள் எவையும் இடம் பெற்றிருந்த போதிலும் மிகப் பாரிய சொத்து அழிவுகள் ஏற்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் கால்நடைகள் என்பனவும் இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக அழிவடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப் பெரும் குளங்களான தண்ணிமுறிப்பு மற்றும் முத்தையன்கட்டு என்பனவற்றின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக முல்லைத்தீவு பரந்தன் A35 பிரதான பாதையில் பல இடங்களில் வீதியின் குறுக்கே வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது . இந்த வீதியில் சுதந்திரபுரம் பகுதியில் பாலம் ஒன்று உடைபெடுத்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது.