Caroline Jurie

அமெரிக்காவில் நடைபெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Las Vagas-ல் இன்று உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது, இதில் இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட நிலையில், 27 வயதான இலங்கையை சேர்ந்த Caroline Jurie என்ற பெண் 2020-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையில் கடந்த 1984-ஆம் ஆண்டு Rosi Senanayake என்பவர் உலக அழகியா தெரிவு செய்யப்பட்டார். அதன் பின் தற்போது 35 ஆண்டுகளுக்கு பின் Caroline Jurie இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவர் தான் வெற்றி பெற்றார் என்று இறுதி நிமிடத்தில் அறிவிக்கப்பட்ட போது அவர் ஆனந்த கண்ணீர் விட்ட வீடியொ வெளியாகியுள்ளது.
Proud moment 🇱🇰 💪
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) December 7, 2019
New Mrs. World is Sri Lanka 🇱🇰 🏆️.
Caroline Jurie crowned as new Mrs. World 2020 👑.
Congratulations 🙏❤#MrsWorld #MrsWorld2020 #mrssrilanka #LKA #SriLanka #SriLankan #CarolineJurie #Video pic.twitter.com/NLfWI6KvfN
