தமிழகத்தில் குப்பை தொட்டிக்கு அருகே கிடந்த பை ஒன்றில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் இருந்ததால், அதை கண்ட நபர் உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை சாத்தாங்காடு காவல்நிலையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகை செல்வன். இவர் தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற போது, அங்கிருக்கும் குப்பை தொட்டிக்கு அருகே கிடந்த பாலித்தீன் பையை கண்டுள்ளார்.
அதில் ஏதோ மின்னுவது போல் உணர்ந்த அவர் உடனடியாக, அந்த பாலிதின் பையை எடுத்து பார்த்த போது, உள்ளே ஆறு சவரன் தங்க நகை, வாட்ச், பர்ஸ், பட்டுப்புடைவைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.

இதனால் அவர் உடனடியாக அருகில் இருந்த தண்டையார் பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று குறித்த பாலித்தீன் பையை ஒப்படைத்துள்ளார்.
அதன் பின் இந்த நகை குறித்து அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு, அவரிடம் நகை மற்றும் பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.
தற்போது இருக்குக் காலகட்டத்தில் கீழே பத்து ரூபாய் கிடந்தால் கூட, அதை எடுத்து செல்லும் நபர்களுக்கு மத்தியில் கார்த்திகை செல்வனின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

POPULAR POST: கேரளப் பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகிற்கு இதுதான் காரணமாம்!
பெண்களின் அழகு பராமரிப்புகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு.
அதிலும் மலையாள பெண்கள் என்றாலே அவர்களின் நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம், கொழுகொழுவென்று இருக்கும் கன்னங்கள் இவை அனைத்தும் தான் நம் நினைவுக்கு வருகிறது.
எனவே இவர்களின் இந்த சிறந்த அழகிற்கு, அவர்களின் அழகு பராமரிப்பு தான் முக்கிய காரணமாகும்.

மலையாள பெண்கள் அழகின் ரகசியங்கள்
கற்றாழை
மலையாள பெண்கள் எப்போதும் தங்களின் முகத்திற்கு, கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்த மாட்டார்கள். தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.

மஞ்சள்
கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, காரணம், அவர்கள் தினமும் குளிக்கும் போது, மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்த மஞ்சளை தங்களின் உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.
தேங்காய் எண்ணெய்
தினமும் கேரளப் பெண்கள் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதுடன், தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

கடலை மாவு
மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது முகத்திற்கு போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணமாக உள்ளது.
செம்பருத்தி
கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் அவர்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தி பூவை சீகைக்காயைப் போல அரைத்து தங்களின் கூந்தலுக்கு பயன்படுத்துவார்கள்.

சிவப்பு சந்தனம்
கேரளத்து பெண்களின் கொழுகொழு கன்னங்களுக்கு, தினமும் அவர்கள் இரவில் படுக்கும் போது, சிவப்பு நிறமுள்ள சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள்.

கறிவேப்பிலை
கேரளத்து பெண்கள் தங்களின் தலையில் பொடுகு வராமல் தடுப்பதற்கு, தினமும் இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை கழுவி வருவார்கள்.
