திறமை என்பது உடன் பிறந்தது அல்ல பல மணி நேர உழைப்பால் பிறந்தது.

அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த அழகிய மாற்றுத்திறனாளி பெண். பல மணி நேர முயற்சியால் கோடிக்கணக்கான மக்களின் மனதை நடனமாடி வென்றுள்ளார்.
அவர் ஆடிய நடனத்தை பார்த்து பார்வையாளர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். அவரின் குறைகள் எதுவுமே திறமைக்கு தடையாக இல்லை.

இது அனைவருக்குமே மிக சிறந்த எடுத்து காட்டு. முயற்சி மட்டுமே வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றும் என்பது உண்மையே. குறித்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
MOSTREAD:
உலகறிந்த தமிழன் சுந்தர் பிச்சை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்…!
சுந்தர் பிச்சை என்ற பெயருக்கு யார் என்று அறிமுகம் தேவையில்லை. கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக அவரை கூகுள் நிறுவனம் நியமித்தபோது உலகமே வியந்து பார்த்தது அவர் யார் என்று. அந்த பெருமை தமிழ்நாட்டை வந்து சேர்ந்தது. ஏனென்றால் சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. தற்போது இவர் அமெரிக்க வாழ் இந்தியராக உள்ளார்.

அதைத் தொடர்ந்து தற்போதும் ஒரு அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தற்போது அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டது தான் அந்த செய்தி. இந்த செய்தி மீண்டும் ஒரு முறை சுந்தர் பிச்சையை உலகறிய செய்துள்ளது.

பிறப்பு
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ரகுநாத பிச்சை மற்றும் தயார் லட்சுமிக்கு மகனாக பிறந்தார். இவர் மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றி வந்தார் சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை. மதுரையில் பிறந்தாலும் சென்னை அசோக் நகரில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீட்டில்தான் சுந்தர் பிச்சை வசித்து வந்தார்.
படிப்பு
சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்து முடித்தார் சுந்தர் பிச்சை. பிறகு கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டியில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு, உதவித் தொகையுடன் அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

ஒரு வருட சம்பளம்
சுந்தர் பிச்சையின் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக அவரது தந்தை தனது சேமிப்பிலிருந்து ஒரு பெரிய தொகையை செலவிட வேண்டியிருந்தது. அக்காலப்பகுதியில் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டின் கட்டணம் சுந்தர் பிச்சையின் தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கும் அதிகமானதாக இருந்தது.
கடுமையான உழைப்பு
ஒருமுறை நியூயார்க் டைம்ஸுக்கு சுந்தர் அளித்த பேட்டியில், தனது கல்லூரி தேர்வுகளின் போது ஒரு பாடம் ஒன்றில் சி கிரேடு பெற்றதாக கூறினார். மேலும், தனது முதல் ஆண்டு மதிப்பெண்கள் மிகவும் மோசமாக இருந்ததாகவும், பின்னர் அவற்றை சமப்படுத்த நன்றாக படிக்க கடுமையாக உழைத்ததாகவும் அவர் கூறினார்.
2004 ஆம் ஆண்டு மேலாண்மை நிர்வாகி என்ற சாதாரண பொறுப்பில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை இன்று அடைந்திருக்கும் உயரம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. இதற்காக அவர் சந்தித்த சவால்கள், முதலீடாக்கிய கடின உழைப்பு ஏராளம்.

திருமண வாழ்க்கை
சுந்தர் பிச்சையின் திருமணம் காதல் திருமணம். ஐஐடி கரக்பூரில் சுந்தர் பிச்சை படித்துக் கொண்டிருக்கும் போது அஞ்சலியை சந்தித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ
2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாகி என்ற சாதாரண பொறுப்பில் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் குரோம், ஜி-மேப், ஆண்ட்ராய்டு என அந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் சிறப்பாக பணியாற்றினார். மேலும், கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து 2105ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அப்போது, ஒட்டுமொத்த உலகமும் அவரை வியந்து பார்த்தது. சுந்தர் பிச்சை இந்தியர் என்பதால், இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

ஆல்பபெட் நிறுவனம்
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனமானது, தற்போது சுமார் 28 துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆல்பபெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது, கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

புதிய பொறுப்பு
தற்போது ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு பதவியும் சுந்தர் பிச்சைக்கு கிடைத்துள்ளது. ஆல்பபெட் நிறுவனத்துக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் தனித்தனியே தலைமைச் செயலதிகாரியும் தலைவரும் தேவையில்லை எனவும், சுந்தர் பிச்சையே இரண்டு நிறுவனங்களுக்கும் தலைமைச் செயலதிகாரியாகச் செயல்படுவார் எனவும் பேஜ், பிரின் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

புகழாரம்
சுந்தர் பிச்சைக்குக் கிடைத்துள்ள இந்தக் கூடுதல் பொறுப்பு அவரின் திறமையை பொறுத்து அமைந்துள்ளதாக அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆல்பபெட் நிறுவனத்தின் செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து சிறப்பாக இயங்கும் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
“கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதேப்போன்று சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு பணியிலும் சிறப்பாகச் செயல்படுவார்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் பேஜ் மற்றும் பிரின்.

நன்றி தெரிவித்த சுந்தர் பிச்சை
ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை. ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக அறிவிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
2004ஆம் ஆண்டு மேலாண்மை நிர்வாகி என்ற சாதாரண பொறுப்பில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை இன்று அடைந்திருக்கும் உயரம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. இதற்காக அவர் சந்தித்த சவால்கள், பிரச்சனைகள், தோல்விகள் ஏராளம். அவற்றிலிருந்து கற்றுக்கொண்ட விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் ஏராளம். இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறார் சுந்தர் பிச்சை.
