ஜனாதிபதியின் உத்தரவால் 1000 கோடி ரூபா செலவு தவிர்ப்பு!

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுத்துள்ளார்.

இதன் காரணமாக வருடம் ஒன்றிற்கு 1000 மில்லியன் ரூபா பணத்தை மீதப்படுத்த முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த பணத்தை மக்களுக்கு வரி சலுகையாக வழங்குவதற்கும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு மாத்திரம் வாகனம் கொள்வனவு செய்வதற்காக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 3215 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மாத்திரம் வாகனங்களுக்காக 1971 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் 2020ஆம் ஆண்டில் மாத்திரம் 1000 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வாகன காப்புறுத்திகாக செலவிடப்படவிருந்த 300 மில்லியன் ரூபாவுக்கு அதிக பணமும் மக்களுக்காக பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.