ஆன்லைனில் சந்தித்த நபருக்காக அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தன்னுடைய கிட்னியை தானம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டான் சம்மர்ஸ் என்பவருக்கு 20 வயதில் கீல்வாதம் தாக்கியதால் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருடைய 50 அல்லது 60களில் அல்லது இன்னும் 10 வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைவிட, 30 வயதிலேயே அவருக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று, சிறுநீரக நன்கொடையாளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இருந்தாலும், பொருந்தக்கூடிய சிறுநீரகம் கிடைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் டான் சம்மர்ஸ், டேட்டிங் இணையத்தளம் ஒன்றின் மூலம் லிசா என்கிற பெண்ணை சந்தித்து நட்பை வளர்த்து கொண்டிருந்துள்ளார்.
எதார்த்தமாக அந்த பெண் மருத்துவனை சென்று பரிசோதித்த போது, அவருடைய சிறுநீரகம் அப்படியே டான் சம்மர்ஸ்க்கு பொருந்தியுள்ளது. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இப்படி அமையும் என மருத்துவர்களும் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளனர். உடனே லிசா தன்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார்.

பின்னர் இருவருக்குள்ளும் காதல் மலர, திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதியன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், தங்களுடைய வாழ்க்கை சிறுநீரக நன்கொடையாளர்களை ஊக்குவிக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளனர்.
POPULAR POST:

மண்ணுக்குள் புதையுண்ட நண்டு உயிருடன் எழுந்து ஓடும் அதிசயம்! மில்லியன் பேரை வியக்க வைத்த காட்சி….
உலகில் தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அவை யாவும் நாம் அறிந்திருப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.
எனினும், நம்மை பாதுகாத்து வரும் இந்த இயற்கையை விட பெரியதோர் அதிசயத்தை நாம் கண்டுவிட முடியாது.
இயற்கையை விட இரம்மியமான காட்சி வேறு என்ன இருக்கிறது. இந்த காட்சியை பல மில்லியன் மக்கள் ரசித்துள்ளனர்.
கடல் அதிசயம் என்றால் கடலில் வாழும் உயிரினங்கள் பேரதிசயம். இந்த காணொளியை பாருங்கள் உங்களுக்கே புரியும்.