யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் திடீரென வலியால் துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, வியாழக்கிழமை காலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அட்லாண்டா செல்லும் விமானத்தில் பயணித்தேன்.
நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது காலில் எதே குத்துவது போல் உணர்ச்சியை உணரத் தொடங்கினேன், தொடர்ந்து குத்திக்கெண்டே இருந்ததால் பயங்கரமாக வலி ஏற்பட்டது, உடனே கழிவறைக்கு சென்றேன்.
அப்போது, உயிருடன் தேள் ஒன்று எனது உடையில் இருந்து வெளியேறியது, இறுதியில் விமான பணிப்பெண்கள் அதை பிடித்தனர் என கூறினார்.

சம்பவம் குறித்து யுனைடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அட்லாண்டாவுக்கு பயணித்த விமானத்தில் எங்கள் பயணிகளில் ஒருவரை தேள் கடித்துள்ளது. விமானக்குழுவினர் உடனடியாக முதலுதவி அளித்தனர்.
அட்லாண்டாவில் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்ட பெண் பயணி உள்ளுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார் என விமான நிறுவனம் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

POPULAR POST:

உலகமே பாராட்டும் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை முறை
ஒவ்வொருவருடைய உடலும் வாழ்க்கை முறையும் வித்தியாசமானது என்பதால், அவரவர் வசதிக்கேற்ப உணவையும் தூங்கும் நேரத்தையும் தீர்மானித்துக்கொள்ளலாம்.
“வாழ்க்கையில் பெரிதாக சாதித்தவர்கள் எல்லாம் அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களே, நீயும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றால், காலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்” – நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சொல்லப்படும் அறிவுரைகளில் இதுவும் ஒன்று.

நம்முடைய ரோல் மாடலாக இருப்பவர்கள் எல்லாம் அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள் என்று தெரிந்ததும், நாமும் காலையில் சீக்கிரமே எழ வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்குவோம்.
இதனால் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து, அதை 40 முறை கதற விட்டு, கடைசியில் நமக்கு வழக்கமான ஏழு அல்லது எட்டு மணிக்கு எழுவதெல்லாம் மாற்ற முடியாத கதை.

அந்தப் பிரபலம் வேறு யாரும் இல்லை, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும், நம் மதுரைக்காரருமான சுந்தர் பிச்சைதான்!
அவர் இதுபோல் கூறியுள்ளது, காலங்காலமாக நாம் பின்பற்றி வரும் `அதிகாலையில் எழுபவர்கள்தான் சாதிப்பார்கள்’ என்ற கருத்தை மாற்றியிருக்கிறது.

இதுபற்றி சுயமுன்னேற்றப் பேச்சாளரும், `சக்ஸஸ் ஞான்’ என்ற அமைப்பின் நிறுவனருமான சுரேந்திரனிடம் பேசினோம்.
சூரியன் உதிக்கும்போது எழுவதும், மறையும்போது உறங்குவதும்தான் நல்ல பழக்கம். அப்படிச் செய்தால்தான் அன்றைய நாள் முழுக்க உற்சாகமாக இருக்கமுடியும்.
இதை வழக்கப்படுத்திக்கொண்டால், வாழக்கையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்’ என்ற எண்ணம்தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
இது தவறில்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்தில், அது அனைவருக்கும் சாத்தியமானதா என்று பார்க்க வேண்டும்.

இங்கு, ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் வித்தியாசமானது. பணி இயல்பும் நேரமும் வெவ்வேறானவை. எனவே, அதிகாலையில் எழுதல் என்பது அனைவருக்கும் ஒத்துவராத ஒன்று.
நான் சந்தித்த, வெற்றிபெற்ற நபர்களில் சிலர், இரவு 10 மணிக்கு முன்பே உறங்கி அதிகாலையில் எழுந்து பணிகளுக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.
சிலர், சுந்தர் பிச்சை போன்று இரவு அதிக நேரம் வேலை செய்துவிட்டு, காலையில் நேரம் கழித்து எழுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதனால், அதிகாலையில் எழுந்தால்தான் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும் என்றெல்லாம் இல்லை.
இதுபோல், பல கருத்துகளை நாம் காலம் காலமாக நம்பி வருகிறோம். உணவு முறையிலும் அப்படித்தான்.
பசிக்கிறதோ இல்லையோ மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்ற மறைமுக கட்டாயத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தற்போது, ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிடும் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றனர்.

இது, பலருக்கு நல்ல ரிசல்ட் கொடுத்துவருவதாகவும், இரண்டு வேளை சாப்பாடுதான் என்றாலும், கொஞ்சமும் களைப்பில்லாமல் வேலை செய்வதாகவும் ஏராளமானவர்கள் கூறுகிறார்கள்.
இவரைவிட யாராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது!’- ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை
இவரைவிட யாராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது!’- ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை

ஒவ்வொருவருடைய உடலும் வாழ்க்கை முறையும் வித்தியாசமானது என்பதால், அவரவர் வசதிக்கேற்ப உணவையும் தூங்கும் நேரத்தையும் தீர்மானித்துக்கொள்ளலாம்.
எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஜிம் போன்று எதுவாகவும் இருக்கலாம்.
அதிகபட்சமாக ஏழு மணிநேரம் நிம்மதியான உறக்கமும் ஆரோக்கியமான சமச்சீர் உணவும் அவசியம். இதைத் தவறாமல் பின்பற்றினாலே, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் நினைத்த லட்சியத்தை அடையலாம்” என்றார்.

சுந்தர் பிச்சையின் சில சுவாரஸ்ய பழக்கவழக்கங்கள்.
சுந்தர் பிச்சை தன்னுடைய சிறு வயதில், சாம்பாருடன் பாயசத்தைக் கலந்து சாப்பிடும் பழக்கம் உடையவராம்.
மற்றவர்களைப் போலவே, ஏராளமான வேலை வாய்ப்புகள் சுந்தரைத் தேடிவந்தபோதிலும், தன் மனைவி அஞ்சலியின் ஆலோசனைப்படி கூகுளோடு இணைந்து நீண்ட காலம் பயணித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரின் வீட்டில், எப்போதும் இருபதிலிருந்து முப்பது மொபைல் போன்கள் இருக்குமாம். அவை அனைத்தும் டெஸ்டிங்குக்காக மட்டுமே. 2006-ம் ஆண்டு, தன்னுடைய முதல் ஸ்மார்ட் போனை வாங்கியுள்ளார்.
ஆனால், 1995-ம் ஆண்டே மோட்டோரோலா ஸ்டார்டேக் (Motorola Startac) போன் வாங்கி, கேட்ஜெட்ஸ் உலகின் முன்னோடியாக இருந்துள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில், கூகுள் இல்லாத வாழ்க்கை முறையைப் பார்ப்பது கடினம். ஆனால், கூகுளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு, தினமும் எழுந்ததும் ஒரு கப் தேநீரோடு `வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை இல்லையென்றால் அன்றைய நாள் நகராதாம்.
கணினியில் அதிக நேரம் வேலைபார்ப்பவர்களை, `நீ என்ன சுந்தர் பிச்சையா?’ என்று கூறுவதுண்டு. ஆனால் சுந்தரோ, அலுவலகத்தில் இருக்கையில் இருப்பதைவிட, அதிக நேரம் நடைபாதையில் நடந்துகொண்டேயிருப்பாராம்.
ஆகவே மக்களே, “அதிகாலையில் எழுந்தால்தான் சாதிக்க முடியும் என்றில்லை”. நமக்கெல்லாம் காலையில் எழுவதே பெரிய சாதனைதானே! எனவே, உங்கள் உடலும் மனமும் என்ன சொல்கின்றனவோ அதைக் கேளுங்கள்.
உங்கள் உடலுக்கு அதிக நேரம் ஓய்வு தேவைப்பட்டால், காலையில் எழுவதற்கு நேரமானாலும் பரவாயில்லை, தூங்குங்கள். ஆனால், ஆபீஸுக்கு சென்று பஞ்சிங் வைக்க நேரமாகி, சம்பளம் கட் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
