2004 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் தொலைந்துபோன 19 வயது பெண், பேஸ்புக் உதவியுடன் 15 வருட காலத்திற்குப் பிறகு தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டில், நான்கு வயது பவானியும் அவரது சகோதரரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது பவானி காணாமல் போனார்.
பவானியை அழைத்துச்சென்ற ஜெயா, வளர்ப்புத் தாயாக மாறியுள்ளார். ஜெயாவிடம் வளர்ந்த பவானி இடைநிலை வரை கல்வி கற்றுள்ளார்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பவானி விஜயவாடாவில் உள்ள தனது வம்சீதர் பச்சுவின் வீட்டில் வீட்டு உதவியாக வேலை தேடிக்கொண்டிருந்தார்.
பவானியின் ஆதார் மற்றும் பிற ஆவணங்களை அடையாளச் சான்றாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு வம்சீதர் கோரியுள்ளார்.
இருப்பினும், அந்த ஆவணங்களை பொறாத பவானி, தான் வளர்ப்புத் தாயால் வளர்க்கப்பட்ட அனாதை என்று விளக்கியுள்ளார்.
வேலையைப் பெறுவதற்காக பவானி கதையை உருவாக்குகிறார் என்று சந்தேகித்த முதலாளி வம்சீதர், சமூக ஊடகங்களில் அவர் கூறிய கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடிவு செய்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக தனது குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தாலும், பவானி தனது சகோதரரின் பெயர், சந்தோஷ், அவர்களது குடும்பப் பெயர் மற்றும் அவர் வாழ்ந்த சிபுரிபள்ளியில் உள்ள தனது கிராமத்தின் பெயரை நினைவுபடுத்தி கூறியுள்ளார்.
பின்னர் வம்சீதர் பவானியின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பேஸ்புக்கில் தேடியுள்ளார். பேஸ்புக்கில் அவரது சகோதரரின் பெயரான கோடிபெட்லா சந்தோஷில் கணக்கை தேடியுள்ளார், சுமார் 20 கணக்குள் இதே போன்ற பெயர்களுடன் இருந்துள்ளது.

அவர்களது குடும்பத்தில் யாராவது 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயிருக்கிறார்களா என்று விசாரித்து அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியுள்ளார் வம்சீர்.
30 நிமிடங்களில், சந்தோஷ் என்ற கணக்கு ஒன்றிலிருந்து அவருக்கு பதில் வந்துள்ளது, அதில், ஏழு வயதில் தனது சகோதரி உண்மையில் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். வம்சீரின் மெசேஜிக்கு பதிலளித்த சந்தோஷ், பவானியின் மூத்த சகோதரர் என உறுதியாகியுள்ளது.

பேஸ்புக்கில் தனது சகோதரர்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி வம்சீதர் தெரிவித்தபோது, மகிழ்ச்சியடைந்த பவானி, உடனடியாக அவரது குடும்பத்தினரான, சந்தோஷ், கோபி, அவரது தாய் வரலட்சுமி மற்றும் தந்தை மாதவ ராவ் உடன் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார்.
விரைவில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் விஜயவாடாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
POPULAR POST:

வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 110 சவரன் நகைகள் மாயம்: மருமகளுடன் சிக்கிய மாமனார்!
வீட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மாயமான விவகாரத்தில், மருமகளும் மாமனாரும் நாடகமாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த துணி வியாபாரியான ராஜையனுக்கு, மனைவி மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மூத்த மகனின் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது முகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு, கழுத்தில் துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் மூத்த மருமகள் பிரீத்தா கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பிரீத்தாவிடம் விசாரித்த போது, கொள்ளையர்கள் இருவர் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரீத்தாவும், அவருடைய மாமனார் ராஜையனும், வீட்டிலிருந்த 110 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரிடமும் பொலிஸார் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் 110 சவரன் நகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை எனக்கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் கொடுத்த புகாரில் 110 சவரன் எனகூறியிருந்ததால் சந்தேகமடைந்த பொலிஸார், பிரீத்தா மற்றும் ராஜையனிடம் மட்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போதுதான் வீட்டிலிருந்தது 60 சவரன் நகை மட்டுமே என்பது தெரியவந்தது. அதில் 50 சவரன் நகைகளை விற்று இளைய மகளின் கடன்களை அடைத்த ராஜையன், 10 சவரன் நகைகளை மட்டுமே மூத்த மருமகள் பிரீத்தா முன்னிலையில் வீட்டின் மூலையில் புதைத்து வைத்துள்ளார்.
ஆள் இல்லாத சமயத்தில் அதனை எடுத்து சிறிது சிறிதாக செலவு செய்த பிரீத்தா, நகைகள் காணாமல் போனதாக அனைவரையும் நம்பவைக்கவே அப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்ட பொலிஸார், எச்சரித்துவிட்டு சென்றனர்.
