இன்றைய ராசிபலன் 08.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 22ம் தேதி, ரபியுல் ஆகிர் 10ம் தேதி, 8.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி காலை 8:36 வரை, அதன் பின் துவாதசி திதி, அசுவினி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:07 வரை, அதன் பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

ரிஷபம்

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் சிக்கல்கள் குறையும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.

POPULAR POST:

டிசம்பர் மாதத்தில் 12 ராசிகளையும் எந்தெந்த நாட்களில் சந்திரஷ்டமம் ஆட்டிப்படைக்க போகுது தெரியுமா?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் டிசம்பர் மாதத்தில் சந்திராஷ்டம நாட்கள் எப்போது நடக்கும் என்றும் இந்த நாட்களில் என்ன முன்னெச்சரிக்கை செய்யலாம் என பார்ப்போம்.

மேஷம்
டிசம்பர் 23 காலை 11.52 முதல் டிசம்பர் 25 மாலை 4.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வம்பு சண்டைக்கு போக வேண்டாம். மவுன விரதம் மனதிற்கும் உடம்பிற்கும் ரொம்ப நல்லது.

ரிஷபம்
டிசம்பர் 25 மாலை 4.41 மணி முதல் டிசம்பர் 27 இரவு 11.45 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இரண்டு நாட்களுக்கு மவுன விரதம் இருக்கவும்.

மிதுனம்
டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி காலை 12.56 வரையிலும் டிசம்பர் 27 இரவு 11.45 மணி முதல் டிசம்பர் 30 காலை 9.34 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். இந்த 4 நாட்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.

கடகம்
டிசம்பர் 3 ஆம் தேதி காலை 12.56 மணி முதல் டிசம்பர் 5,2019 இரவு 1.23 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. இரண்டு நாட்கள் கவனம் தேவை. நிதானமாக இந்த நாட்களை கடக்கவும்.

சிம்மம்
டிசம்பர் 5,2019 இரவு 1.23 மணி முதல் டிசம்பர் 8 அதிகாலை 1.27 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மவுன விரதம் மனதிற்கு நல்லது.

கன்னி
டிசம்பர் 8 அதிகாலை 1.27 மணி முதல் டிசம்பர் 10 காலை 11.17 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.

துலாம்
டிசம்பர் 10 காலை 11.17 மணி முதல் டிசம்பர் 12 இரவு 6.23 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மவுன விரதம் இருக்கவும்.

விருச்சிகம்
டிசம்பர் 12 இரவு 6.23 மணி முதல் டிசம்பர் 14 இரவு 11.16 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் மவுன விரதம் இருக்கவும்.

தனுசு
டிசம்பர் 14 இரவு 11.16 மணி முதல் டிசம்பர் 17, காலை 2.47 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. இரண்டு நாட்களுக்கு மவுன விரதம் இருக்கவும் கவனம் தேவை.

மகரம்
டிசம்பர் 17 காலை 2.47 மணி முதல் டிசம்பர் 19,காலை 5.39 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை மவுன விரதம் இருக்கவும். இரண்டு நாட்களுக்கு கவனம் தேவை.

கும்பம்
டிசம்பர் 19,காலை 5.39 மணி முதல் டிசம்பர் 21,காலை 8.28 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை. மவுன விரதம் இருப்பது மனதிற்கு ஆறுதல் தரும்.

மீனம்
டிசம்பர் 21 காலை 8.28 மணி முதல் டிசம்பர் 23,காலை 11.52 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. மவுன விரதம் இருக்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.