4 பேருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த இளம் பெண் கர்ப்பம்… யார் உண்மையான தந்தை என அவரே விளக்கம்!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் நான்கு ஆண்களுடன் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு யார் காரணம் என்பதையும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் Jacksonville-வில் Tory Ojeda(20) என்ற இளம் பெண் நான்கு ஆண்களுடன் வசித்து வருகிறார்.

இவர் தன்னுடைய பள்ளி பருவத்தில் Marc(தற்போது 18) என்ற நபரை சந்தித்து அவருடன் ஒரு தொடர்பில் இருந்துள்ளார். இதை தொடர்ந்து மார்க்கை சந்தித்த அடுத்த இரண்டு மாதத்தில், Travis(23) என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது.

இதையடுத்து தன்னுடைய நீண்ட நாள் நண்பர்களான Ethan(22) மற்றும் Christoper(22) ஆகியோரையும் சேர்த்து, மொத்தம் நான்கு பேருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், அனைவருக்கும் தனித் தனி அறை உண்டு, இவர்கள் அனைவரிடமும் இரவு நேரங்களை படுக்கை பகிர்ந்ததுண்டு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த ஜுலை மாதம் Travis-ஐ திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதையடுத்து சமீபத்தில் Tory Ojeda கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.

இவரின் கர்ப்பத்திற்கு யார் காரணம் இந்த நான்கு பேரில் என்ற கேள்வி நிலவியது. அதற்கு Tory Ojeda இதற்கு உண்மையான தந்தை Christoper தான், நாங்கள் அனைவரும் குழந்தையை வளர்ப்பதில் ஒன்றாக இருக்கிறோம், எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

POPULAR POST:

விஜயகாந்தின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது! மணப்பெண் யார் தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கு 2 மகன்கள். மூத்த மகன் விஜய பிரபாகரன். கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஸ்மேசர்ஸ் பேட்மிண்டன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுடன் அவருக்கு நிச்சயம் ஆனது.

நிச்சயதார்த்த கோலத்தில் விஜயபிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர். விஜயபிரபாகரன் – கீர்த்தனா திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.