இன்றைய ராசிபலன் 09.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 23ம் தேதி, ரபியுல் ஆகிர் 11ம் தேதி,
9.12.19 திங்கட்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி காலை 10:05 வரை,
அதன் பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் நாளை அதிகாலை 5:48 வரை,
அதன் பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : பகல் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலமான பலன் கிட்டும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் தாராள பண வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் தாமதநிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

மகரம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளால் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

POPULAR POST:

2020ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

மேஷம்
இந்த வருடம் உங்களுக்கு தடைகள் நிறைந்த வருடமாக இருக்கும், எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்க நேரிடலாம்.

இது மட்டுமின்றி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியற்றத் தன்மையுடன் இருக்கும். 2020 ஆம் ஆண்டில் பெரிய மாற்றங்களுக்கான எந்த பெரிய முயற்சியும் எடுக்காமல் நிதானமாக இருக்க வேண்டும்.

மோசடிகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது எனவே முதலீடுகளில் கவனம் அவசியம்.

பயணங்கள் செய்யும் முன் நன்கு ஆலோசிக்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மட்டும் பயணம் செய்யவும். விபத்துகளில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் எதனையும் சமாளிக்க தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. குரு சனிபகவானுக்கு எதிர்க்க இருப்பதால் காரியங்கள் அனைத்தும் கடினமானதாக இருக்கும். உங்களுக்கு கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

உங்களின் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடப்பது உங்களுக்கு நல்லது. உங்களை நீங்கள் அதிகம் நம்புவதுதான் இந்த ஆண்டில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும்.

ஆபத்தான முதலீடுகள் எதிலும் ஈடுபட வேண்டாம். புதிதாக ஒருவரை நம்புவதற்கு முன்னர் தீர ஆலோசிக்கவும்.

துலாம்
மற்றவர்களை நம்புவதுதான் உங்களுக்கு இந்த வருடம் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்த வருடம் உங்களுக்கு மிகுந்த துரதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது.

எனவே அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் எந்த காரியத்திலும் இந்த வருடம் இறங்க வேண்டாம். குறிப்பாக முதலீடுகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும். இந்த காலக்கட்டம் உங்கள் வாழ்க்கையில் தடுமாறும் காலமாகும், எனவே ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

காதல் வாழ்க்கையில் வருடத்தில் இரண்டாம் பாதியில் பெரிய புயல் ஏற்படும். தவறான வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள், மற்றவர்களின் சத்தியங்களை நம்பாதீர்கள்.