ஒரு வயது சிறுவனுக்கு கல்லீரல் பிரச்சினை.. உயிருக்கு போராட்டம்.. உங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த செய்தியை பகிருங்கள், யாராவது உதவக்கூடும்!

image_pdfimage_print

சென்னை: கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 1 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

powered by Rubicon Project என் பெயர் அர்ஜுன் வாக். நான் மாஸ்டர் கிரிஷ் சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கேட்கிறேன் . அவனுக்கு 1 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த இளம் வயதில் அவனுக்கு குரோனிக் லிவர் நோய் மற்றும் செகண்டரி கோரோலிஸ் நோய் (chronic Liver disease and secondary corolies Disease) இரண்டும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவன் தற்போது பெங்களூர் நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனது நோயை குணமாக்க வேண்டும் என்றால் உடனே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உடனே அவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மொத்தம் .16,50,000 ரூபாய் செலவாகும்.

கடைசி இரண்டு மாதமாக நாங்கள் ஏற்கனவே 7 லட்சம் வரை அவனின் சிகிச்சைக்கு செலவு செய்துவிட்டோம். ஆனால் தற்போது எங்களிடம் பணம் இல்லை. செலவுகளை கொஞ்சம் கூட சமாளிக்க முடியவில்லை. நாங்கள் இப்போது மாஸ்டர் கிரிஷ் சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கேட்கிறோம்.

மாஸ்டர் கிரிஷ் குடும்பம் வறுமையானது. அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்தால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை உடனடியாக செய்ய முடியும்.

மாஸ்டர் கிரிஷ் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் மாஸ்டர் கிரிஷ் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

பண உதவி செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் – https://www.edudharma.com/fundraiser/this-mothers-fear-of-losing-her-son-will-come-true-if-her-1-yr-old-doesnt-receive-liver-transplant

POPULAR POST:

26 வயது தாயின் உயிரைக் காப்பாற்றிய 5 வயது மகன்… பிரித்தானியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

பிரித்தானியாவில் ஆபத்தான நிலையில் இருந்த தாயின் உயிரை காப்பாற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவரின் ஐந்து வயது மகனுக்கு பொலிசார் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Durham-ல் இருக்கும் Willington-ஐ சேர்ந்தவர் Caroline Frater. 26 வயதான இவருக்கு Leo Cooper என்ற 5 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் திகதி சமயலறையில் இருந்த Caroline Frater திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு விரைவாக பக்கவாதத்தை ஏற்படுத்த கூடிய நரம்பியல் நோய் இருப்பதால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் இருந்த அவரின் ஐந்து வயது மகன் Leo Cooper உடனடியாக அவசர உதவி எண்ணான 999-க்கு போன் செய்து, தன்னுடைய அம்மா தரையில் விழுந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

அவனிடம் தொடர்ந்து சுமார் 20 நிமிடம் அவசர உதவியாளர் பேசிக் கொண்டிருக்க, அவர் வீட்டிற்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வந்ததால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது நலமாக இருக்கிறார். தக்க நேரத்தில் எந்த ஒரு பதட்டமுமின்றி போன் செய்து, தாயின் உயிரை காப்பாற்றிய Leo Cooper-ஐ பெருமைபடுத்தும் விதமாக அவருக்கு அந்த நேரத்தில் அவசர உதவிக்கு வந்த அதிகாரிகள் விருது வழங்கி கவுரவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே Caroline Frater இந்த நோயை அறிந்துள்ளார், அப்போதே அவர் தன்னுடைய மகனிடம் போன் எப்படி பயன்படுத்துவது, ஏதேனும் அவசரம் என்றால் யாருக்கு போன் செய்ய வேண்டும்? தன்னுடைய மருத்து மாத்திரைகள், வீட்டின் முகவரி போன்றவைகளை மனப்பாடம் செய்ய வைத்துள்ளார்.

அதுவே தற்போது அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவியுள்ளது என்று Caroline Frater தெரிவித்துள்ளார்.