ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிக்கட்டிய வாலிபர்.. வெளியான பரபரப்பு தகவல்..!

வேலூரில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலிகட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கல்லூரி படிக்கும் போதே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண்ணுக்கு, திருமணம் நிச்சயக்கபட்டுள்ளது. இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, காலை வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்தில் அந்த பயணித்துள்ளார். அப்போது, ஜெகன் திடீரென தாலியை எடுத்து அந்த பெண்ணிற்கு கட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ஜெகனை அடித்து உதைத்தனர்.

பின்னர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்துள்ளனர். அந்த பெண் அளித்தப்புகாரில் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POPULAR POST:

புட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்!

தாய்மையே ஒரு தியாகம் என்னும்போது, தன் தாய்ப்பாலையும் தானம் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளார் ஒரு அமெரிக்கப்பெண்.

விர்ஜினியாவைச் சேர்ந்த ஜினா மிட்ச்செல் (36), தான் வீட்டில் இல்லாதபோது குழந்தைக்கு பசித்தால் கொடுப்பதற்காக அவ்வப்போது தாய்ப்பாலை சேகரித்து பிரீஸரில் சேமித்து வந்துள்ளார். ஆனால் ஜினாவின் குழந்தை பாட்டிலில் அடைக்கப்பட்ட பாலைக் குடிக்க மறுத்துவிட்டது.

சுமார் 10 லிற்றர் பால் இருக்கிறதே, வீணாய்ப்போகக்கூடாதே என்று எண்ணிய ஜினா, பேஸ்புக்கில் உள்ளூர் குழுக்களிடம் விடயத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். எதிர்பார்த்ததை விட விரைவாக பதில் வந்துள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்றை தத்தெடுத்து, போதுமான பால் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த ஒரு பெண், தன் குழந்தைக்கு அந்த பாலைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிறகு ஜினாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. இப்போது தன் குழந்தைக்கு பாலூட்டும்போதெல்லாம், ஒரு பக்கம் அவளுக்கு பாலூட்டிக்கொண்டே மறுபக்கம் ஒரு பாட்டிலில் பாலை சேகரிக்கிறார் ஜினா.

இதுவரை 20 லிற்றர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளாராம் ஜினா. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விடயமும் உள்ளது. ஜினா குழந்தையாக இருக்கும்போது, அவரது தாயான Bonnie Dinatro (73)ம் தாய்ப்பால் தானம் செய்தவர் என்பதுதான் அது.

Bonnie யாருக்கெல்லாம் தாய்ப்பால் தானம் செய்தாரோ, அவர்களிடமிருந்து இன்றும் அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் வந்து கொண்டிருக்கிறதாம்!