கோட்டபாயவை தமிழ் மக்கள் நிராகரித்தமை ஏன்? உண்மையை வெளிப்படுத்திய மஹிந்தவின் மகன்!!

மஹிந்தவின் மகன்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வட மாகாண மக்கள் வாக்களிக்காமைக்கான காரணம் என்ன என்பதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷ விளக்கியுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கில் எங்களுக்கு யாரும் வாக்களிக்கவில்லை. எனினும் அது வடக்கு மக்களின் தவறு அல்ல. அது நாங்கள் செய்த தவறு தான். வடக்கில் வாழும் மக்களின் அவசியத்தை அடையாளம் காணவில்லை. நாங்கள் அந்த அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த மக்களின் மனங்களை வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட வேண்டும். தமிழ் மக்களினால் எங்களுக்கு பயன் இல்லை என சிந்திக்கும் அரசியல் மன நிலையே உள்ளது.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் இணைந்து செயற்பட வேண்டும். அவர்களை பிரிக்க கூடாது. அவர்கள் தமிழர்கள், சஜித்தின் மக்கள் என பிரிக்க கூடாது.

உதாரணமாக நான் றக்பி விளையாடுகிறேன். விளையாடும் போது என்னுடன் விளையாடும் நபர்கள் முஸ்லிமா, தமிழரா, பறங்கியரா என்று பார்ப்பதில்லை. என்னை எதிர்த்து விளையாடும் நபர் யார் என்று பார்ப்பதில்லை.