கோட்டாபய ராஜபக்சவின் அடுத்த அதிரடி அறிவிப்பு.. !அமைச்சர்களுக்கு தடை போட்ட ஜனாதிபதி!

”அமைச்சர் ஆளணியில் உறவினர்கள் நியமனம் கூடாது ” – ஜனாதிபதி உத்தரவு !

அமைச்சர்மார் அல்லது இராஜாங்க அமைச்சர்மார் தமது ஆளணி நியமனத்தின்போது உறவினர்களை நியமிக்கக் கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர்மார் தமது அலுவலக ஆளணி நியமனத்தின்போது உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தனர். அமைச்சரின் தனிப்பட்ட செயலாளராக அவரது மனைவி அல்லது பிள்ளைகளை நியமிக்கும் ஏற்பாடுகளே இருந்தன.

ஆனால் இந்த நடைமுறை இனி தொடரக் கூடாதென உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி, அமைச்சருக்கும் ஆலோசகர் பதவியில் ஒருவரை மட்டுமே நியமிக்க முடியுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தனது ஊழியர் சபைக்காக எந்தவொரு குடும்ப உறுப்பினர்களையும் நியமிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

POPULAR POST:

முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு இணைய சேவை மற்றும் தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு!

புதிய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்களுக்கு அமைய அதன் நன்மைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

வற், தொலைத்தொடர்பு வரி விலக்கு மற்றும் பிற வரி திருத்தங்கள் காரணமாக தொலைபேசி கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைய சேவைக்காக இதுவரை அறவிட்ட வரி பெறுமதி நூற்றுக்கு 19.4 வீதத்தில் இருந்து 10.2 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சாதாரண தொலைபேசி அழைப்பிற்காக இதுவரை அறவிடப்பட்ட 37.7 வரி கட்டணம் நூற்றுக்கு 22.6 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முற்கொடுப்பனவு அட்டைகளுக்கான வரிப்பணம் குறைப்படவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதே கட்டணம் அறவிடப்பட்டாலும், கட்டணத்திற்கு பொருத்தமான டேட்டா அளவினை அதிகரிப்பதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.