பிரியங்காவின் ச டலத்தோடு லொறியில் பயணித்த கொ டூரர்கள்! முதல் முறையாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள்!

image_pdfimage_print

பிரியங்காவின்..

ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டியை ப லாத்காரம் செய்து கொ ன்ற பின்னர் அவர் ச டலத்தை நான்கு கொ டூரர்களும் லொ றியில் ஏற்றி கொண்டு சாலையில் பயணித்த முதல் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் 28ஆம் திகதி தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதால் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பிரியங்காவை க டத்திச் சென்ற நான்கு பேர் அவரை ப லாத்காரம் செய்து பின்னர் கொ ன்று எ ரித்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோர் கடந்த 6ஆம் திகதி பொலிசாரால் என் கவுண்ட்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

இந்நிலையில் 28ஆம் திகதி நால்வரும் பிரியங்கா ச டலத்தை அவர்களின் லொறியில் வைத்து எடுத்து செல்லும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அருகில் இருந்த டோல்கேட் பிளாசாவில் உள்ள கமெராவில் தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, பிரியங்கா சடலத்தை ஏற்றி கொண்டு ஒரு லொறி டோல்கேட் அருகில் இரவில் 10.08 மணிக்கு வருகிறது, பின்னர் அந்த இடத்தை சில நொடிகளில் கடப்பது போல உள்ளது.

அதே போல இன்னொரு சிசிடிவி பதிவில் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் பங்க் அருகில் லொறி செல்வது போல பதிவாகியுள்ளது. இதற்கு நடுவில் தான் பிரியங்காவின் பைக் பஞ்சரை சரி செய்த கு ற்றவாளிகளில் இருவர் அதை எடுத்து கொண்டு பெட்ரோல் பங்குக்கு சென்று போத்தலில் பெட்ரோல் வாங்கினார்கள்.

பின்னர் தான் லொறியில் இருந்த பிரியங்காவின் ச டலத்தை போர்வையால் போர்த்தி எடுத்து சென்று நள்ளிரவு 2 மணியில் இருந்து 2.30 மணிக்குள் பெட்ரோலை ச டலத்தின் மீது ஊற்றி எ ரித்துள்ளனர்.