2020 ஆம் ஆண்டில் குரு, சனியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை உச்சத்திற்கு போகப்போகுது!

வாழ்க்கையில் நல்லது நடக்குமா? நாமளும் பணக்காரர்கள் ஆவோமா, நமக்கு விடிவு காலம் பிறக்குமா என்று ஏங்கித்தவிக்கிறீர்களா? இத்தனை ஆண்டுகாலமாக கஷ்டங்களுடன் வாழ்ந்தாகி விட்டது. இனி பிறக்கப் போகும் 2020ஆம் ஆண்டில் நமக்கு பிரச்சினை தீருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே இந்த ராசி பலன்.

நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்கலாம். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள்.

மன்னராக இருப்பவர்கள் முடி துறந்து நாடு இழந்து நளன் போல அலைய வேண்டியதுதான். சனி அருள் பெற்றவர் சகுனி. சனி அம்சத்தில் பிறந்தவர் துரியோதனன். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். மரணிக்கும் வரை ஆட்சியில் இருந்தார். தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனி பகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் உச்சத்தை தொடப்போகும் இந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம். பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ குருவின் அருள் தேவை.

நவ கிரகங்களின் குரு பகவான் தனது சஞ்சாரத்தினால் பல நன்மைகளை செய்வார். குரு பகவான் இப்போது தனது வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இது அற்புதமான யோகம். நமக்கு கஷ்டங்கள் தீர வேண்டும் நாமும் வாழ்நாளில் ஒருநாளாவது கோடீஸ்வரன் ஆக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

மாத சம்பளம் வாங்கி பதினைந்து நாட்களிலேயே அடுத்த மாத சம்பளத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பிறக்கப் போகும் புத்தாண்டில் சனி, குரு ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகிறது. அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு. குரு பகவான் கேது உடன் இணைந்து பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளது சிறப்பு. அற்புதமான யோக நிலை. குரு கேது இணைவு கோடீஸ்வர யோகம். குரு பார்வை மேஷ ராசியின் மீது விழுகிறது. சனிபகவான் பார்வையும் ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையப் போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மகர ராசிக்கு செல்வது சச மகா யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜயோக அமைப்பு உண்டாகிறது. பண மழை பொழியப்போகிறது. 2020ஆம் ஆண்டு கிரகங்களின் சாதகமான சஞ்சாரத்தினால் அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைகிறது.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, குரு பகவான் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார் என்றாலும் அஷ்டம குருவாக அமர்ந்தாலும் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தருவது சிறப்பு. அதே போல சனிபகவான் அஷ்டம சனி விலகி பாக்ய ஸ்தானத்தில் அமர்வது அற்புதம். செய்யும் தொழிலில் லாபம் வரும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் நஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு இனி ராஜயோகம்தான். உங்க சுய ஜாதகத்தில் தசாபுத்தி அற்புதமாக இருந்தால் ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.

மிதுனம்

குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக பார்வையிடுகிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. ராசிக்கு ஏழாம் வீட்டில் தற்போது உள்ள சனிபகவான் 2020ஆம் ஆண்டில் அஷ்டம சனியாக ஆட்சி பெற்று அமரப்போகிறார். என்றாலும் பயப்பட வேண்டாம். அவர் எட்டுக்கு உடையவர் எட்டில் மறைந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார். திடீர் பணவரவு, பதவியில் இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும்.

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களை ஏழரை ஆண்டு காலம் ஆட்டி படைத்து விட்டார் சனி பகவான். உடல் ரீதியாக, மன ரீதியாக பல துன்பங்கள் பட்டு விட்டனர். இனி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. குரு பகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அதே போல மூன்றாம் வீட்டில் சனி அமர்வது டாப்தான் கடந்த ஏழரை ஆண்டுகாலம் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும். தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் குவியப்போகிறது. செவ்வாய் வீடு அதிகாரம் படைத்த வீடு. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மகத்தான கால கட்டமாக உள்ளது. அற்புதமான ராஜயோக அமைப்பாக உள்ளது. வெளி நாடுகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி சூரியன் ஆட்சி பெறும் ராசி. இந்த ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு மகத்தான ராஜயோகம், பதவி யோகம் கிடைக்கப் போகிறது. சனி பகவான் ஆறாம் வீடு விபரீத ராஜயோக நிலை கிடைக்கிறது. சனிபகவான் ஆறுக்கு உடையவன். சனி சூரியனுக்கு பகையாக இருப்பவர். அவர் சிம்ம ராசிக்கு கெட்டவர் ஆறாம் வீட்டில் மறைவது அற்புதம். 3,6,11 சனிபகவான் இந்த வீடுகளில் அமரும் போது சனிபகவான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். மகத்தான ராஜயோகத்தை தருவார். பதவி இழப்பு, உத்தியோகத்தில் புரமோசன் இல்லாமல் இருப்பது, பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருந்து வந்தீர்கள். இந்த சனி பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். இந்த யோகங்கள் பார்வையால் பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள்.

கும்பம்

ராசிநாதன் சனிபகவான் 12ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பயங்கர லாபத்தை தருகிறார். சனியும் குருவும் பதவி யோகம், ராஜயோகத்தை தருவார்கள். இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழில் லாபத்தை தரும். 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது. தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும் சொத்து சுகம் சேரும் காலம் வந்து விட்டது.

மீனம்

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பதவி யோகம் கிடைக்கும். தலைமை பதவி கிடைக்கும். இனி சனியின் அருளால் சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். மகத்தான யோக நிலைகளை சனிபகவான் தரப்போகிறார். செல்வாக்கும் சொல்வாக்கும் கிடைக்கப் போகிறது. இந்த புத்தாண்டு உங்களுக்காக ஆண்டாக பிறக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.