கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தினால் உ யிரிழப்பு!!

image_pdfimage_print

விபத்தினால்..

சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

கடந்த எட்டாம் திகதி ஏற்பட்ட விபத்தில் 83 வயதான சின்னத்தம்பி சுந்தரலிங்கம் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் விபத்து நேர்ந்துள்ளது.

கடந்த எட்டாம் திகதி மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், துவிச்சக்கரவண்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீதியின் வலது பக்கம் திரும்ப முற்பட்ட போது பின் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக இவரை மோதி தள்ளியுள்ளது.

விபத்தில் காயமடைந்த முதியரை வீதியால் சென்றவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உ யிரிழந்துள்ளார்.

இ றப்பு விசாரணையை திடீர் இ றப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.