சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை சேர்ந்த தங்க வீராங்கனைகள்! குவியும் வாழ்த்துக்கள்!

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு பதக்கங்களை வெற்றி பெற்ற நிலையில், நேற்று நாடு திரும்பியிருந்தது. தெற்காசிய நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இலங்கை மூன்றாமிடத்தை பெற்றிருந்தது.

40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடகங்களாக 251 பதக்கங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சர்வதேச போட்டியொன்றில் இலங்கை பெற்ற அதிகூடிய பதக்கங்கள் இதுவாகும்.

2001ஆம் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை குழாம் 178 பதக்கங்களை பெற்றமையே அதிகூடியதாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் அமஷா டி சில்வா, நதீஷா ராமநாயக்க, துலஞ்சலி ரணசிங்க ஆகிய வீராங்கனை அதிகூடிய தங்க பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

இலங்கைக்கு பெருமை தேடித்தந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் துமிந்த சில்வா நேபாளம் சென்றிருந்தார். வெற்றிக்குழுவுடன் அமைச்சரும் நாடு திரும்பியிருந்தார்.

ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நேபாளம் 51 தங்க பதக்கங்களை பெற்ற நிலையில் இரண்டாமிடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகளில் இந்தியா 172 தங்க பதக்கங்கள், 93 வெள்ளிப் பதக்கங்கள் 45 வெண்கல பதக்கங்கள் அடங்களாக மொத்தமாக 310 பதக்கங்களை பெற்றுள்ளது. 51 தங்க பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 94 வெண்கல பதக்கங்கள் அடங்களாக 204 பதக்கங்களுடன் நேபாளம் பதக்க பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பதக்க பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.