யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக ப லி!!

image_pdfimage_print

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில்..

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எம்.திலீபன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த வான் மீது, குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.