அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும்-ஜனாதிபதி

image_pdfimage_print

முன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். இதன்போது உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரச சேவையை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதில் நவீன தொழிநுட்பத்தை கூடியளவு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச கட்டமைப்பை ஊழல் மோசடிகள் அற்ற சரியான பொறிமுறையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது ” என்றார்.