இன்றைய ராசிபலன் 13.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 27ம் தேதி, ரபியுல் ஆகிர் 15ம் தேதி,
13.12.19 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி காலை 11:10 வரை,
அதன் பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 7:45 வரை,
அதன் பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

மேஷம்: எந்த விஷயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுத்து சிறப்பாக செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு நெருக்கமாவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன் மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச்செல்லும். உடல் நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: வேலையை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுற்றத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சமங்களை கற்று கொள்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் சிறப்பான நாள்.

கன்னி

கன்னி: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், திறமையும் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் பணிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு

தனுசு: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாக மாறும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் திறமையைக் கண்டு வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: வருமானத்திற்கு தேவையான புதிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.நண்பர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர் பாராத விஷயங்கள் இன்று முடியும். தாயாருடன் மனகசப்புகள் ஏற்படும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டியது இருக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.