முல்லைத்தீவில் சமாதான அணிவகுப்பு மேற்கொண்ட தென்பகுதி சிறுவர்கள்!

தென்னிலங்கையில் இருந்து இன்று முல்லைத்தீவிற்கு சென்ற சிறுவர்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் சிலாவத்தை பகுதியில் சமாதான அணிவகுப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த அணிவகுப்பு இன்று பிற்பகல் முல்லைத்தீவு, சிலவத்தை பிரதான விதியில் ஆரம்பமாகி லதனி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தது.

குறித்த சிறுவர் இல்லத்தில் வாழும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன், பங்குத் தந்தை நெவில் பூச்சேனும் இணைந்து தென்பகுதியில் இருந்து சென்ற சிறுவர்களை வரவேற்றிருந்தனர்.

மேலும் கடந்த காலம் நடைபெற்ற மறக்கமுடியாத சம்பவங்களுக்கு தென்பகுதி சிறுவர்கள் மனம் வருந்துகின்றனர் என்பதற்கு அடையாளமாக இந்த அணிவகுப்பு இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர்கள் முல்லைத்தீவில் மூன்று நாட்கள் தங்கியிருந்து பொதுநல சேவைகள் பல செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.