விபத்து!

மோட்டா் சைக்கிள் மீது கார் மோதியதில் விற்பனையாளர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அவர் அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை அருகே சமீபத்தில் நடைபெற்ற ஒரு சாலை விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ துறையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த ஒருவர் சுமார் 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த கார் மோதியதால், இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து தொடர்பாக பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவர் மருத்துவ துறையில் விற்பனையாளராக பணியாற்றி கொண்டிருந்தார். சமீபத்தில் பணி நிமித்தமாக இவர் வண்டலூர் பகுதிக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கு பணியை முடித்து விட்டு, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரமாக இருந்த ஒரு பேக்கரி கடையில் டீ குடிப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை லோகநாதன் திருப்பி சென்றார். அந்த நேரத்தில் சர்வீஸ் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக லோகநாதன் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் லோகநாதன் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

இதன் காரணமாக உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை கண்டதும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தனர். இதனால் பயந்து போன கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

காண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக பொலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே இதுபோன்ற சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதுடன் வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதும் நல்லது.


