திருகோணமலை மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட சம்பூர் கிராம பகுதியில் இலவச சிங்கள மொழி அறிவு கற்கை நெறி இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமூக அபிவிருத்தி கட்சியினர் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள 10,000 மாணவர்களுக்கு இலவசமாக சிங்கள மொழியினை கற்பித்து கொடுக்கும் செயல் திட்டத்தினை செயல்படுத்தினர்.
மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட சம்பூர் கிராமம் மற்றும் பாட்டாலி புரம் கிராமம் ஆகியவற்றில் இருந்து 75 மாணவர்களுக்கு சம்பூர் சனசமூக நிலைய கட்டடத்தில் சிங்கள கற்கை நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சமூக அபிவிருத்தி கட்சியின் செயலாளர் கே.பிர காஸ் மற்றும் மூதூர் பிரதேச சமூக ஆர்வலர் குகதாசன் மற்றும் ரிச்சர்ட் (சிங்கள கற்றை ஆசிரியர்) கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு இலவசமாக கற்பித்து கொடுப்பதற்கு என தாமகவே சில தொண்டர் ஆசிரியர்கள் முன்வந்துள்ளதாகவும். அடுத்தடுத்த நாட்களில் வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு பிரதேசங்களாக சென்று மாணவர்களுக்கு சிங்கள மொழியறிவு இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என சமூக அபிவிருத்தி கட்சியினர் தெரிவித்தனர்.
