குறைக்கப்பட்ட வரியின் நன்மைகள் பொதுமக்களை சென்றடைய அரசாங்கம் நடவடிக்கை!

இம் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் வற் வரி மற்றும் ஏனைய வரியைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக பல பொருட்களின் விலை குறைவடையும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் சேமநல இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். வற் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால் அதனுடன் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கான விலையும் குறைவடையும்.

இந்த வற் வரிக்கு உட்பட்டதாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைவடையும். விசேடமாக பல பொருட்களின் விலைகள் குறைவடையும். இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை தற்போது கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த வற் வரி மற்றும் இதர வரி குறைப்புக்கான நன்மைகள் பொது மக்களை சென்றடைய வேண்டும். இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. குறைக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்படவேண்டும். இதனை நுகர்வோர் அதிகார சபை உறுதி செய்யும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.