ஜனாதிபதி கோத்தபாய ராஜபகஸ்வின் இலங்கையில் உள்ள நகரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரினை தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயகக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக விஜயசுந்தர, மட்டக்களப்பு தலைமையக பொறுப்பதிகாரி யு.பி.ஹெட்டியாராட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு நகரின் வடிகான்கள்,குப்பைகூழங்கள் அதிகம் காணப்படும் பகுதிகள்,நீர் நிலைகள்,வாவியோரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
அதேபோன்று காந்தி பூங்கா,பஸ் நிலையம் உட்பட பல பகுதிகளிலும் பொலிஸாரினால் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
