முல்லைத்தீவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 38 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் நுளம்பு வலைகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களுக்கும், பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 8 குடும்பங்களுக்கும், பேராறு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களுக்குமாக மொத்தமாக 38 குடும்பங்களுக்கு குறித்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் இந்திரகுமார், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ப.நிறைஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.