முல்லைத்தீவில் வெயிலுடன் கூடிய காலநிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு வார காலமாக கனமழை பெய்துவந்த நிலையில் இன்று வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.

நேற்றும் அதற்கு முன் நாட்களிலும் ஏற்பட்டிருந்த அடைமழை காரணமாக அன்றாடம் கூலிவேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கடற்தொழில் விவாசாய நடவடிக்கைகள் என்பன முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போழுது முல்லைத்தீவில் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற சந்தர்ப்பத்தில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தமது நாளாந்த வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் மாந்தை கிழக்கு, துணுக்காய், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களின் இயழ்பு வாழ்க்கை இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.