முல்லைத்தீவில் துரிதகதியில் இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கை துரிதாமாக இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முல்லைத்தீவு கடற்கரை அண்மித்த பிரதேசங்களில் இரவு பகலாக அடையாளம் தெரியாதவர்கள் மண் அகழ்வும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடவடிக்கையின் காரணமாக எதிர்காலத்தில் கடல் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடும் ஆபாயம் இருப்பதாக முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும குறித்த மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இவ்வாறன மண் அகழ்வு நவடிக்கையின் காரணமாக அரச மற்றும் தனியார் காணிகளும் போக்குவரத்து வீதிகளும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாகவும்’ தெரிவிக்கப்படுகின்றது.