இந்த காலத்தில் முல்லைத்தீவில் இப்படி ஒரு தமிழ் வைத்தியரா! நெகிழ்ச்சியான சம்பவம்!

நன்றி – Bala Prass

அண்மையில் முல்லைத்தீவு குமுழமுனை கிராம மருத்துவமனை சென்றிருந்தேன் வாசலில் ஒரு அம்மம்மா மருந்தெடுக்க வந்தனியா ஐயா?

நல்ல டாக்குத்தர் அவன்ரை முகராசி எல்லா வருத்தமும் குணப்பட்டு போகும். யாரிந்த doctor பாப்பம் எண்டு உள்ளே சென்றேன்.

15 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் கையில் பல நிற வர்ண தாள்களுடன் (அடிப்படை உணவுப்பழக்கவழக்கம், சுகாதார பழக்கவழக்கங்கள் அச்சிடப்பட்டிருந்தது) இருந்தனர்.

எனக்கும் தரப்பட்டது ஏன் இதை தருகிறார்கள் என்று பக்கத்தில் ஒருவரை கேட்டேன் இதை படித்து doctor பரிசோதிக்கும் போது கேள்வி கேட்பாராம் பதில் சொல்லோணுமாம் என்றார்.

பக்கத்தில் இன்னொருவர் உடற்பருமனை குறைக்க 10 paper இல் தீர்வு எழுதிக்கொண்டிருந்தார் ஏனென்று கேட்க doctor punishment தந்தவராம்.

இப்படி ஒருவரா ஆச்சரியப்பட்டேன் அனைவரின் முகத்திலும் ஒருவித சந்தோசத்தை மட்டுமே கண்டேன்.

வணக்கம் கூறி அமர்த்தி பரிசோசித்து மருந்துகளை பற்றி தனித்தனியே விளக்கமளித்து அனுப்பினார்.

அத்தனை பெயர்களுக்கும் சிறிதும் முகம் சுழிக்காத அன்பான அரவணைப்பான பேச்சு அந்த அம்மம்மாவை மட்டுமல்ல அனைவரையும் வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

திரு .முகுந்தன் doctor அவர்களின் சேவைக்கு கிராம மக்கள் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.