ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இலங்கை வேலைத்திட்டம் தமிழர் தாயகப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை பூராகவும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்திலும் ஓவியம் வரையும் செயற்பாடு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளில் கலாச்சாரம், பாரம்பரியம் என்பனற்றை வெளிப்படுத்தும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டம் ஒன்றை தமிழ் இளைஞர்கள் சிறப்பாக முன்னெடுத்து வருவதாக தென்னிலங்கையில் அதிகம் பேசப்படுகின்றன. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் வரையப்படும் சுவர் ஓவியங்கள் பெரும்பாலானவை இனவாத ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









