சுக்கிரன் தற்போதுள்ள தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
பகை வீடான தனுசு ராசியில் கேது குரு சனி உடன் இருந்த சுக்கிரன் இனி தனித்து சனியின் வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகிறார்.
டிசம்பர் 15 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை மகரத்தில் சஞ்சரிப்பார்.
சுக்கிர பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களைக் கொடுக்கப் போகிறார் என பார்ப்போம்.

மேஷம்
சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. சுக்கிரன் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருந்து பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார்.
அங்கிருந்து சுக்கிரன் பார்வை உங்க சுக ஸ்தானத்தை பார்க்கிறார். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும்.
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராகு மூன்றில் ஒன்பதில் குரு இருந்தாலும் சுக்கிரன் பத்தில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. கூட்டுத் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருங்கள்.
வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். ராசி அதிபதி செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுகிறது அற்புதமான அம்சம் என்றாலும் நிதானம் தேவை.
வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்
உங்க ராசி அதிபதி சுக்கிரன் எட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். அற்புதமான அம்சம். இதுநாள்வரை உங்களுக்குத் தடைபட்டிருந்த காரியங்கள் மளமளவென முடியும். புதிய வேலை கிடைக்கும் உற்சாகமாக இருப்பீர்கள்.
பண வரவு நன்றாக இருக்கும். உங்க எண்ணங்கள் நிறைவேறும். இதுநாள் வரை நடக்காத விசயங்கள் இனி நடக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சுக்கிரன் பாக்ய ஸ்தானத்திற்கு வந்தாலே இன்பம்தான்.
கூடவே பாக்ய ஸ்தானத்தின் மீது செவ்வாய் பார்வையும் விழுவது சிறப்பு. வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும்.
காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது.
பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். பணவரவும் அதிகரிக்கும். சிவனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனம் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம்.

மிதுனம்
சுக்கிரன் மிதுனம் ராசிக்கு 12ஆம் வீட்டு அதிபதி உங்களுக்கு எட்டாம் வீடான மகரம் ராசியில் அமர்வது விபரீத ராஜயோக அமைப்பை தருகிறார். உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பது சிறப்பு.
பண வரவு அற்புதமாக இருக்கும். உங்க சொல் வெல்லும் சொல்லாக இருக்கும். பிறரது மனதை கவரும் வகையில் பேசுவீர்கள். திடீர் தன யோகம் வரும். மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும்.
இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.
பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம்.

கடகம்
களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் கணவன் மனைவி பிரச்சினைகள் ஏற்படும். தொழிலில் விட்டுக்கொடுத்து போங்க வீணாக பேச வேண்டாம். ஏற்கனவே ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிப்பது சாதகமாக இல்லை இப்போது சுக்கிரனும் ஏழாம் வீட்டில் அமர்கிறார்.
சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவது சிறப்பு காதலோடு பேசுவீர்கள். புதிய காதல் உருவாகும்.
வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது.
தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

சிம்மம்
சுக்கிரன் பத்துக்கு உரியவர். சூரியனுக்கு பகையானவர். அவர் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.
எதிரிகள் தொல்லை அதிகமாகும் எச்சரிக்கை தேவை. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.
இனிமையான பேச்சுக்களால் மனைவியை குளுமைப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது.
சகோதர வகையில் சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்படும் ஐந்தில் குரு, லாபத்தில் ராகு இருப்பதால் எதையும் எதிர் கொள்வீர்கள். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அம்பிகையை விளக்கேற்றி வணங்கவும்.

கன்னி
உங்க ராசிக்கு தன ஸ்தான அதிபதி சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் அமரப்போகிறார். அற்புதமான கால கட்டம், நிறைய ஆதாயங்களை பெறலாம். விஐபிக்களின் ஆதரவு கிடைக்கும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு சாதகமான சுக்கிர பெயர்ச்சியாக உள்ளது. குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும்.
வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றவர்களின் மனதில் இருந்த கவலை நீங்கும். காரியங்கள் சாதகமாக முடியும்.
கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெற்றிகரமான கால கட்டம் இது. நண்பர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்வீர்கள். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

துலாம்
உங்க ராசி நாதன் சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் திக் பலம் பெறுவதால் தடைபட்ட காரியம் நிறைவேறும். புதிய சொத்துக்கள் சேரும். முயற்சிகள் சாதகமாக நிறைவேறும். நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும்.
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அம்மா உடன் நெருக்கம் கூடும். நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள்.
புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.
அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். அம்மாவின் வகையில் உதவி கிடைக்கும் உத்தியோக உயர்வும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் சில ஆலயங்களில் அம்மனுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர பாதிப்புகள் மறையும்.

விருச்சிகம்
சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்வதால் உங்க பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். முயற்சிகளை துரிதப்படுத்துவார். தன்னம்பிக்கை தைரியம் உயரும். குரு இரண்டாம் வீட்டில் இருப்பதும் சாதகம்.
உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள்.
சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். முயற்சி வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.
தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும்.
மகளின் திருமணத்தை சற்றே தள்ளிப்போடுவது நல்லது. பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைகள் ஏற்படும். காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் ஏற்படும்.
தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். நெருப்பு, இயந்திரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்கள்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தர பாதிப்புகள் குறையும்.

தனுசு
உங்க ராசிக்கு அதிபதி குரு ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தான சுக்கிரனால் தன யோகம் வரும் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உங்க எண்ணங்கள் நிறைவேறும். வேலையில் சிறப்பான யோகத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.
சிலர் வீட்டில் புத்திர பாக்கியம் கிடைக்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள்.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

மகரம்
மகரம் ராசிக்கு யோகாதிபதி சுக்கிரன் உங்களுக்கு சனி, புதன் தவிர சுக்கிரன் யோகத்தை கொடுப்பார்.
சுக்கிரன் ராசிக்கு வருவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். கடன் வாங்கி செலவு செய்வீர்கள். என்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம்.
ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். ஆசைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும்.
கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வெள்ளை நிற மலர்கள் வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
சுக்கிரன் உங்க ராசிக்கு யோகாதிபதி. அவர் 12ஆம் வீட்டில் அமர்வது சிறப்பு. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.
மனம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாடும்.சுப விரைய செலவு ஏற்படும். வீட்டிற்குத் தேவையான டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும்.
பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கிக் கொடுங்கள்.

மீனம்
சுக்கிரன் உங்க ராசிக்கு முயற்சி ஸ்தான அதிபதி, சுக்கிரன் உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள்.
உங்க திட்டமிடல் வெற்றியை தரும். அனைத்திலும் லாபத்தை கொடுக்கும். மனம் மகிழ்ச்சியடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது.
பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும்.
வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெள்ளி, செவ்வாயில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வர நன்மைகள் நடக்கும்.
