விமானத்தில் தன் மீது சாய்ந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர்: நீதிமன்றம் அளித்த தண்டனை!

விமானத்தில் பயணிக்கும்போது தன் அருகே இருந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மருத்துவர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மற்றும் இந்திய பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் Dr. ராஜேஷ் சுப்ரமண்யா, அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவருக்கு பக்கத்து இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்திருக்கிறார்.

அந்த பெண் உறங்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உடல் மேல் யாரோ கைவைப்பதை போல உணர்ந்திருக்கிறார். விழித்து பார்த்தபோது, பக்கத்தில் ராஜேஷ் கண்ணை மூடிக்கொண்டு படுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

மீண்டும் அவர் கண்களை மூட, மறுபடியும் ராஜேஷ் அத்துமீற ஆரம்பித்துள்ளார்.

சட்டென அவரது கையை அந்த பெண் தட்டி விட, அந்த பெண் தன் இருக்கை மீது சாய்ந்ததால், தன்னை தொட அனுமதிப்பதாக தவறாக எண்ணிக்கொண்டதாக கூறி வருத்தம் தெரிவித்துள்ளார் ராஜேஷ்.

பின்னர் சாதாரணமாக இருவரும் பேசிக்கொள்ள, அந்த பெண்ணும் ஒரு மருத்துவர் என்பதால் இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் தன் தந்தையை தொலைபேசியில் அழைத்த அந்த பெண், நடந்ததை அவரிடம் கூற, அவர் பொலிசாரிடம் புகாரளிக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி அவர் புகார் அளிக்க, அவரது தொலைபேசி என்ணை வைத்து பொலிசார் ராஜேஷை கைது செய்துள்ளனர்.

தற்போது நடந்தவற்றை ராஜேஷ் ஒப்புக்கொள்ள, நீதிமன்றம் அவருக்கு 3000 டொலர்கள் அபராதம் விதித்துள்ளதோடு, ஒரு வருடம் பொலிஸ் கண்காணிப்பில் அவர் இருக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

அவர் வேலை செய்த அமெரிக்க மருத்துவமனை ராஜேஷை வேலையை விட்டு நீக்கியுள்ள நிலையில், அவரை நாட்டை விட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.