பிரித்தானியாவில் விழுந்த 41 மில்லியன் லொட்டரி… அதிர்ஷ்டக்காரரை வலை வீசி தேடும் நிறுவனம்! ஏன் தெரியுமா?

பிரித்தானியாவில் 41 மில்லியன் பவுண்ட் விழுந்த லாட்டரி டிக்கெட்டிற்கு இன்னும் யாரும் வெற்றியாளர் வந்து உரிமை கோராததால், அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3-ஆம் திகதி நடந்த EuroMillions குலுக்கலில் 18, 31, 32, 38 மற்றும் 48 எண் கொண்ட டிக்கெட்டிற்கு பரிசு விழுந்துள்ளது. இதன் லக்கி ஸ்டாரின் எண்கள் 4 மற்றும் 12 என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை இந்த இந்த லாட்டரி எண் கொண்ட அதிர்ஷ்டக்காரர் இன்னும் வந்து பெறவில்லை என்று National Lottery நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து லாட்டரி நிறுவனத்தின் ஆப்ரேட்டர் Camelot கூறுகையில், இந்த அதிர்ஷ்டத்திற்கான சொந்தக்காரர் Dorset-ல் தான் இருக்கிறார். அங்கு தான் இந்த டிக்கெட் வாங்கப்பட்டுள்ளது. அதைத் தவிர இப்போதைய நிலைக்கு வேறு தகவல்கள் தெரிவிக்க முடியாது.

இந்த யூரோ மில்லியனின் குலுக்கல் மதிப்பு 40,957,696.60(இலங்கை மதிப்பில் 9,74,52,71,797 கோடி ரூபாய்) எனவும் இது தான் இந்த ஆண்டின் 7-வது மிகப் பெரிய லாட்டரி வெற்றியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்தலொட்டரி நிறுவனத்தின் அறிவுரையாளர் Andy Carter, நீங்கள் இந்த லாட்டரி டிக்கெட்டை ஏங்கேனும் வைத்திருக்கலாம், மறந்திருக்கலாம், இதனால் உங்கள் உடைகளிலோ அல்லது அறையின் பல இடங்களில் இருக்கலாம், இது ஒரு மிகப் பெரிய பணம்.

இப்போது கிறிஸ்துமஸ் வேறு வருகிறது. இது உங்களை மட்டுமின்றி, உங்களை சார்ந்திருப்பவர்களுக்கும் உதவும், உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், எங்கள் ஊழியர்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கின்றனர்.

இதனால் அந்த அதிர்ஷ்டக்காரர் வர வேண்டும், இதை பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த டிக்கெட்டை வைத்திருப்பவர்கள், அடுத்த ஆண்டு மே மாதம் 31-ஆம் திகதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், அப்படி டிக்கெட்டை தொலைத்துவிட்டாலோ, கிழிந்துவிட்டாலோ உடனடியாக பரிசு விழுந்த 30 நாட்களில் அதைப் பற்றி தெரிவித்து, எழுது கொடுக்கும் படியும், நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, அதன் பின் 180 நாட்கள் கழித்து அந்த பரிசை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் வெற்றியாளர் வரவில்லை என்றால் லாட்டரி நிறுவனத்திற்கே சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.