வரலாற்றில் முதன்முறையாக 700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!

வெங்காயம்

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக வெங்காயத்தின் விலை பாரிய அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 700 ரூபாவை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சீரற்ற காலநிலை மற்றும் களஞ்சிய வசதியின்மையினால் வெங்காயத்தின் விலை அதிகரிப்புக்கான காரணமாகும்.

எப்படியிருப்பினும் இலங்கை வரலாற்றில் வெங்காயம் ஒரு கிலோவுக்காக பதிவாகிய மிக அதிகமான விலை இது வென்பது குறிப்பிடத்தக்கது.