அரிசி விற்பனை நிலையங்களுக்கு சென்று அரிசி விலை குறித்து ஆய்வு செய்த ஜனாதிபதி! ஏதோ ஒரு மாற்றம் அல்லது ஒரு வித்தியாசமான அணுகுமுறை!

திடீர் விஜயம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றையதினம் நாராஹேன்பிட்டயிலுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அங்குள்ள சகல அரிசி விற்பனை நிலையங்களுக்கும் சென்று அரிசி விலை குறித்து ஆய்வு செய்துள்ளார். இதன்போது, அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஜனாதிபதி உடன் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி சலுகை விலையில் அரிசியை விற்பனை செய்ய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் உடன்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.