இன்றைய ராசிபலன் 19.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 3ம் தேதி, ரபியுல் ஆகிர் 21ம் தேதி,
19.12.19 வியாழக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 10:19 வரை,
அதன் பின் நவமி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 11:47 வரை,
அதன் பின் அஸ்தம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாள் வரவேண்டிய பணம் கை வந்து சேரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும் வெளி வட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாக வேண்டியிருக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நீங்கள் சாதாரணமாக பேசக்கூடிய வார்த்தைகள் கூட விமர்சனத்துக்கு உள்ளாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: உங்கள் செயல்பாடுகளில் அலைச்சலும் பிரச்சனைகளும் ஏற்படும். மறைமுகப் பிரச்சனைகள் உருவாகும்.யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகனங்களில் பழுது ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும் உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் செயல்களில் தன்னம்பிக்கையோடு ஈடுபடுவீர்கள். பெற்றோர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிந்தனை திறன் பெருகும் நாள்.

தனுசு

தனுசு: உங்கள் தவறான அணுகு முறையைக் கண்டறிந்து மாற்றிக்கொள்வீர்கள் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் புது யுக்திகளால் லாபம் பெறுவீர்கள்.முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் உடனே முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் மதிப்பு உயர்வு புது சலுகைகள் கிடைக்கும் புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கம் அதிகமாகும். அதிக வேலைச்சுமையால் டென்ஷன் ஆகாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. மற்றவர்களிடம் வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும் உத்யோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள் சகோதரர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி சில சூட்சமங்களை சொல்லிக் கொடுப்பார் திறமைகள் வெளிப்படும் நாள்.