ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்த முன்னறிவித்தலுமின்றி அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதனால் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அடி மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு திரியும் நிலைக்கு ஆளாகியிருந்தனர்.

நேற்று இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எந்த முன்னறிவிப்புமின்றி கோட்டாபய சென்றிருந்தார். பொலிஸ் நிலைய நடவடிக்கைகளை கண்காணித்து, அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல்களை வழங்கி விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்னர் நாரஹேன்பிட்டிய பொருளாதார மையத்திற்கும் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சில தினங்களின் முன்னர் களுபோவில வைத்தியசாலையை கடந்து சென்ற கோட்டா, வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வந்தவர்கள், உரிய நேரம்வரை, பூட்டப்பட்ட கதவிற்கு வெளியில் வெய்யிலில் நிற்பதை அவதானித்து, அதிகாரிகளிற்கு டோஸ் கொடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவிரவாக அங்கு நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, இருக்கைகளும் அமைகக்ப்பட்டிருந்தன.