2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகபலன்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது.

தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் இருந்து குரு பகவான் மகரம் ராசிக்கு சென்றடைகிறார்.

இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
2020ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் நம்முடைய கைக்கு வரும்.

வேலை, தொழில் அற்புதமாக அமையும். பொறுப்புகள் கூடும் தன்னம்பிக்கை தைரியம் கூடும். ஊதிய உயர்வும் அதிகமாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்க தொழிலில் ஒருவித உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். குரு அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசிக்கு வந்து சனியோடு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார்.

வீடு, நிலம் வாங்க நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

படிக்கும் மாணவர்களுக்கு நன்மைகள் நிறைய நடக்கும் உயர்கல்வி யோகம் அமையும். வெளிநாட்டிற்கு போய் படிக்க நினைப்பவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்க வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

பிரச்சினைகள் தீரும் காலம் இது. வரவேண்டிய பணம் கைக்கு வரும். சூரியனும் குருவும் உங்களுக்கு மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவார்கள். புகழ், உயர்வு, கல்வியில் மாற்றம், உடல் ஆரோக்கியத்தில் அற்புதமான மாற்றங்களை குரு ஏற்படுத்துவார். நீங்க நினைத்தது பலிக்கும்.

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் அற்புதங்கள் அதிகம் நடக்கும். குரு பகவான் தனுசு ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மகரத்திற்கு செல்கிறார்.

பேச்சில் கவனமாக இருக்கணும். பண முதலீட்டில் கவனமாக இருக்கணும். வெளிநாடு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கால கட்டத்தில் முயற்சி செய்யலாம். வருட முற்பகுதியை விட வருட பிற்பகுதியில் அற்புதமான யோகங்கள் நிறைந்த ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமைகிறது.

ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்க பட்ட பாடுகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.

2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய பார்த்தால் உங்கள் கவலைகள் தீரும் பணவரவு அற்புதமாக இருக்கும். சனி பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு நகர்ந்த பின்னர் நன்மைகள் அதிகம் நடக்கும் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

தன வரவு நன்றாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் வரும். தொழில் அற்புதமாக இருக்கும். முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உடலில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும் அது சரியாகி விடும். ஏப்ரல் தொடங்கி ஜூலை மாதம் வரை உங்களுக்கு சுபிட்சமான கால கட்டம். காரணம் உங்க ராசி நாதன் சுக்கிரன் உங்க ராசிக்குள் இருக்கிறார்.

கல்யாண களை கட்டும். சிலருக்கு காதல் திருமணம் கைகூடி வரும். படிக்கும் மாணவர்கள் வெளிநாடு போக யோகம் வரும்.

உயர்கல்வி யோகம் தேடி வருது. ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறாவிட்டாலும் உங்களுக்கு முந்தைய கால கட்டத்தில் கிடைத்த வருமானங்களை தக்கவைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும்.

நல்ல வீடு, மனை வாங்கலாம். புதிய கார் வாங்கலாம். பெண்கள் நகைகள் வாங்கலாம். வீட்டை அழகுபடுத்தலாம். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் ராகு கேது பெயர்ச்சி நடக்குது.

ராகு உங்க ஜென்ம ராசியிலும் கேது களத்திர ஸ்தானத்திலும் வருகிறார், திருமணம் பற்றி யோசித்து பார்க்காதீங்க. பேசினாலும் தடைகள் வரலாம்.

இளைஞர்களுக்கு இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான வளர்ச்சி கிடைக்கப் போகிறது. நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.

மிதுனம்
2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை ஆசிர்வதிக்கப்பட்ட மாதம். திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும்.

நடுத்தர வயதில் இருப்பவங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளிநாடு போக நினைப்பவங்களுக்கு நல்ல தகவல்கள் வரலாம். வாய்ப்புகள் கதவை தட்டும்போது பிடித்துக்கொள்ளுங்கள்.

ஆர்வத்தோட இருப்பீங்க. நல்ல நல்ல தகவல்கள் கிடைக்கும். ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை கொண்டாட்டங்கள் நிறைந்த கால கட்டம். சந்தோஷமாக இருப்பீங்கள் செலவுகள் அதிகமாகும் அத்தனையும் சுப விரைய செலவுகளாக இருக்கும். மகனுக்கு படிப்பு செலவுகள் ஏற்படும்.

பெண்களுக்கு நகைகள் வாங்குவீங்க. பெண் குழந்தைகளின் திருமணத்தை முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்று கையில் பணம் வரும்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எட்டில் சனி இருக்கும் போது பயணத்தில் கவனம், சொந்த காரங்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் திரும்ப வரவே வராது. மறந்து விட வேண்டியதுதான்.

ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும் உங்களுக்கு பிரச்சினைகள் தீரும். நிறைய சுப செலவுகள் நடைபெறும், பணத்தை முதலீடு செய்வதற்கு திட்டமிடுங்கள். கடன் வாங்க பேசுவீங்க. செலவுகள் வந்தாலும் கடன்கள் வாங்க கூடிய அளவிற்கு வருமானம் வரும்.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சந்தோஷங்கள் அதிகமாகும் உங்க ராசியில் இருந்த ராகு விரைய ஸ்தானத்தில் நகர்கிறார். கேது ஆறாம் வீட்டிற்கு செல்கிறார்.

உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தோல் தொடர்பான நோய்கள் தீரும், சுவாசப்பிரச்சினைகள் தீரும். சுப விரைய செலவுகள் அதிகம் நடக்கும்.

சொத்து நகைகள் வாங்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக எதையும் யோசித்து பொறுமையாக நிதானமாக முடிவெடுக்கவும். 2020ஆம் ஆண்டு உங்களுக்கு நிறைய அதிர்ஷ்டங்களை தரும். சுபிட்சம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டு ஜனவரி மாதத்தில் உங்களுடைய குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்களுக்காகவே பிறந்த புத்தாண்டாக அமைகிறது. பணவரவு உங்களுக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும்.

தொட்டது துலங்கும். அதே நேரத்தில் சுப செலவுகளும் ஏற்படும் உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உடல் நலத்தில கவனமாக இருங்க. இதய பாதிப்பு உள்ளவர்கள் கவனிங்கள். உங்கள் வேலையில் உங்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம், இதனால நீங்க உற்சாகமடைவீர்கள். உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புது வீடு வாங்கலாம். தடைபட்டு நின்ற திருமணங்கள் கை கூடி வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். இதுவே உங்களை உற்சாகப்படுத்தும்.

பணவரவு அதிகமாக இருக்கும். உயர்பதவி யோகம் தேடி வருகிறது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

மருத்துவ ஆலோசனை அவசியம் எடுத்துக்கங்க. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் இறுதியில் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு அற்புதங்கள் நிகழும். குரு பகவான் ஆறாம் வீட்டில் இருப்பாதால் நிதி நெருக்கடி ஏற்படும்.

அத்தியாவசிய செலவுகள் ஏற்படலாம். குடும்ப சூழ்நிலை நன்றாக இருந்தாலும் பிள்ளைகளை கவனிங்க.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் ராகு லாப ஸ்தானத்திலும் கேது ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிப்பது நன்றாக இருக்கும். குரு உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கும் மாறுவது சிறப்பு.

வெளிநாடு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முயற்சி பலிக்கும். இதுவரைக்கும் இருந்த உடல்நல பிரச்சினைகள் தீரும்.

திருமணம் செய்வதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். 2020ஆம் ஆண்டு திருப்புமுனைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை நன்மைகள் அதிகம் நடக்கும். குரு ஐந்தாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார் நன்மைகள் அதிகம் நடக்கும் சனி ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆன பின்னர் அற்புதமான பலன்கள் நடக்கும் நன்மைகள் நடக்கும். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் ஏற்படும்.

நிதி நிலைமை ரொம்ப நன்றாக இருக்கும். நம்முடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கணும். முதுகு வலி மூட்டுவலி தொந்தரவுகள் ஏற்படும் காரணம் சனி ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் நோய்கள் எட்டிப்பார்க்கும்.

மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய கொஞ்சம் சிக்கலான மாதம்தான் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். பிசினஸ்ல முதலீடு செய்ய வேண்டாம்.

சுப விசயங்களுக்கு கடன் கிடைக்கும். வீடு கட்ட லோன் வாங்கலாம். குடும்பத்தில் உற்சாகமாக இருக்கலாம். சந்தோஷம் அதிகமாகும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும் கலைத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

வெற்றிகள் தேடி வரும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் குருவினால் உங்களுக்கு புகழ் கூடும். காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

செப்டம்பர் மாதத்தில் ராகு பத்தாம் வீட்டிற்கும் கேது நான்காம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் உயர்வுகள் ஏற்படும் கலைத்துறை, ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால கட்டத்தில் குரு ஆறாம் வீட்டில் மறையப்போகிறார். சில சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். டிசம்பர் மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் பணம் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

கன்னி
2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம சனியால் தொழிலில் நிம்மதியின்மை இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில பிரச்சினை ஏற்பட்டது. இந்த சூழ்நிலைகள் 2020ஆம் ஆண்டில் மாற்றம் ஏற்படும்.

காரணம் அர்த்தாஷ்டம சனியில் மாற்றம் ஏற்படுகிறது. தொழிலில் லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். மாணவர்களுக்கு பிடித்த காலேஜில் படிக்க இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல நிலை ஏற்படும்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு அதிர்ஷ்டம் கூடி வரப்போகிறது. காரணம் பாக்ய ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பார். மனதில் தன்னம்பிக்கை தைரியம் கூடும். திருமணம் கை கூடி வரும் சிலருக்கு காதல் திருமணம் கை கூடி வரும் எதிர்பாராத பல நல்ல சம்பவங்கள் நடக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நன்மைகள் அதிகம் நடக்கும். நிதானமாக இருங்க. செப்டம்பர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி ஏற்பட்ட பின்னர் உங்க தொழிலில் ஒரு ஸ்திர தன்மை ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைய நடக்கும்.

வெளிநாடு வாய்ப்புகள் வந்து வீட்டுக்கதவை தட்டும். வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய முடிவுகளை நிதானமாக செய்யுங்கள். அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால கட்டம் அற்புதமாக அமையப்போகிறது.

குரு பகவான் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். திருமணம் கை கூடி வரும் புத்திர பாக்கியம் கிடைக்கும் பணவரவு தேடி வரும். மொத்தத்தில் இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொற்காலமாக அமையும்.

உங்களுக்கு தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போங்க வெள்ளிக்கிழமை தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அற்புதமான ஆண்டாக 2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது.

துலாம்
2020ஆம் ஆண்டு துலாம் ராசிக்கு குரு பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது.

குரு பகவான் உங்க ராசிக்கு சில தடைகளை ஏற்படுத்துவர் அவரே உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவது நன்மைதான். வெற்றிகரமான ஆண்டாகத்தான் தொடங்குகிறது. சனி பகவான் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகி உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு.

பண வரவு அதிகமாக இருக்கும். வேலையில் மாற்றம், உத்யோகத்தில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு யோகம் வரப்போகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சுக்கிரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

எட்டாம் வீட்டில் அமர்ந்து சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்க்கிறார். திருமணம் கை கூடி வரும். வாழ்க்கையில் சந்தோஷம் தேடி வரும். பணவரவு அதிகமாகவே இருக்கும். உல்லாச பயணம் செல்வீர்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். என்றாலும் சனி உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்க ராசிக்கு நல்ல காலகட்டம், பண வரவு அபரிமிதாமாக இருக்கும்.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யும். அக்டோபர் முதல் டிசம்பர் கால கட்டத்தில் வேலையில் ஸ்திர தன்மை ஏற்படும். வீடு வாங்கி குடியேற வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் ராகு இருப்பதால் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். சம்பாதித்த பணத்தை எல்லாம் பத்திரப்படுத்துங்கள்.

பேச்சுக்களில் கவனமாக இருங்க குறிப்பாக சொந்தக்காரங்க கிட்ட யோசிச்சு பேசுங்க. குடும்பத்தில் கவனமாக இருங்கள்.

எதையும் பேசும் முன்பு யோசித்து பேசுங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. மொத்தத்தில் துலாம் ராசிக்கு 2020ஆம் ஆண்டு சுபிட்சங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொற்காலமான ஆண்டாக அமையப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த பல ஆண்டுகாலமாகவே சனிபகவானும் குரு பகவானும் உங்க வாழ்க்கையை ஒரு வழி செய்து விட்டார்கள்.

இனி அப்படி இல்லை குரு பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஜனவரி மாதம் ஏழரை சனி முடிந்து மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கு சனி மாறுகிறார். உங்கள் வாழ்க்கையில ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

ஜனவரி முதல் மார்ச் வரை பணவரவு அபரிமிதமாக வரும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய அதிசயங்கள் அற்புதங்கள் நிகழும். உங்க தசாபுத்தி நன்றாக இருந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு சந்தோஷங்களும் உற்சாகமும் நிறைந்த ஆண்டாக அமைகிறது. வானத்தில் பறப்பது போல உணர்வீர்கள். படிக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் கை கூடி வரும்.

சிலருக்கு காதல் பிறக்கும் இந்த கால கட்டத்தில் சுக்கிரன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார் முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்கள். ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நல்ல பண வரவு கிடைக்கும்.

நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் நல்லது நிறைய நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண பாக்கியம் கிடைக்கும். பேசும் பேச்சுக்களில் மரியாதை இருக்கும். தொழிலில் நல்லது நடக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.

கேது உங்க ராசியிலும் ராகு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். புதிய மாற்றங்கள் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உங்களுக்கு புதிய பாதை தென்படும் திடீர் திருப்பு முனைகள் ஏற்படும். குரு பகவான் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

உறவுகளிடம் பேசும் போது கவனமாக இருங்க. நிதி நிலைமை நன்றாக இருக்கும். நன்மைகள் அதிகம் நடக்கும். ஆலய தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் மொத்தத்தில் உங்களுக்கு 2020ஆம் ஆண்டு அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

தனுசு
ஜென்ம சனி, விரைய குரு என பல அடிகளை தாங்கி வந்த நீங்கள் இனி 2020ஆம் ஆண்டை சந்திக்கப் போகிறீர்கள். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. ஏ

ழரை சனியில் ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டீர்கள். இனி பாத சனிதான். வேலை, கல்வி, குடும்பம் என பல பிரச்சினைகள் இருந்தன, இந்த ஆண்டு முதல் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கப் போகிறது.

சோதனைகளை கடந்து விட்டீர்கள் இனி சாதனைகள்தான். வேலைகளை இழந்து தவித்தவர்களுக்கு புதிய நல்ல வேலை கிடைக்கும்.

குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். இருளில் தவித்தவர்களுக்கு புதிய வெளிச்ச கீற்று தென்படும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியில்லாமல் தவித்த உங்களுக்கு இனி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை நடக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை நிச்சயம் கிடைக்கும்.

சிலருக்கு வெளிநாடு யோகம் அமையும். திருமணம் கை கூடி வரும், திருமணமாகி குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

குருபகவான் அதிசாரத்தில் உங்க குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் உங்களுக்கு நல்ல விசயங்கள் நிறைய நடக்கும் என்றாலும் பதற்றத்துடனேயே இருப்பீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் மனதளவில் தைரியமாக இருங்க இனி உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் காரணம் ஜென்ம கேது மோட்ச ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கும் ஆறாம் வீட்டிற்கும் ராகுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.

தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். இனி உங்களை தவிர யாராலும் ஜெயிக்க முடியாது உலகம் உங்களுக்கானது என்று உறுதியாக நம்புவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். 2020ஆம் ஆண்டு உங்க வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறப்போகிறீர்கள்.

மகரம்
2020ஆம் ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு மகத்துவமான ஆண்டாக அமையப்போகிறது. ஏழரை சனியில் விரைய சனி முடிந்து ஜென்ம சனியாக ஆரம்பிக்கிறார். குரு விரைய குருவாக நீடிக்கிறார்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்கள். உடம்பில் ஏதோ வியாதி இருக்குமோ என்று அச்சப்பட வைக்கும் பயப்பட வேண்டாம்.

உங்கள் தொழிலை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். பெரிதாக எதையும் முதலீடு பண்ணாதீங்கள். இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்படாதீங்க நஷ்டம்தான் ஏற்படும். நல்ல தசாபுத்தி நடந்தா மட்டுமே துணிந்து இறங்குங்கள்.

உங்க ராசிக்குள்ள இருக்கிற சனி உங்க தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வயதானவங்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கால கட்டத்தில் புதிய மாற்றங்கள் வரும்.

காரணம் விரைய ஸ்தானத்தில் உள்ள குரு உங்க ஜென்ம ராசிக்கு அதிசாரத்தில் வருவார். அதோட சுக்கிரன் இந்த கால கட்டத்தில் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

காதல் மலரும் சிலருக்கு கல்யாணம் நடக்கும். பெண்களுக்கு நகை சேரும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீங்கள். சிலர் வீடு வாங்குவீங்கள்.

நம்பிக்கை நீரூற்று கண்ணில் தென்படும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் பண விசயத்தில கவனமாக இருங்கள். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்கள்.

எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு நெருக்கடியை தரும். அந்த செலவை எப்படி சமாளிக்கப் போறோமோன்னு நினைப்பீங்கள் இதனால மன அழுத்தம் வரும்.

12ஆம் வீடு மோட்ச ஸ்தானம் குரு அங்க இருப்பது நிம்மதியை கொடுக்கும். என்னதான் செலவு வந்தாலும் கடன் நெருக்கடி இருந்தாலும் படுத்தால் தூக்கம் வரும்.

அதுவே உங்களுக்கு நிம்மதியை தரும். ராகு கேது பெயர்ச்சி நடக்குது அப்போது கேது லாப ஸ்தானத்துக்கும் ராகு ஐந்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவது நிம்மதியாக இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை ரொம்ப நல்லது நடக்கும். உங்கள் முயற்சி வெற்றியடையும்.

நிதி நிலைமையில் இருந்த நெருக்கடி மாறும் பணம் பல விதமாக வரும் காரணம் இந்த கால கட்டத்தில்தான் குரு பெயர்ச்சியாக உங்க ராசிக்கு வந்து சனியோடு சேர்ந்து அமர்கிறார். குரு நீசமடைந்தாலும் ஆட்சி பெற்ற சனியோடு சேர்ந்து நீச பங்க ராஜயோக அமைப்போடு இருப்பது சிறப்பு.

நிறைய நல்லது நடக்கும். மொத்தத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு நிம்மதியான ஆண்டாக இருக்கும். நிதானத்தோடு பொருமையோடு கடவுள் நம்பிக்கையோடு இருங்க அவர் கைவிட மாட்டார்.

கும்பம்
2020ஆம் ஆண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல ஆண்டு. உங்க ராசி நாதன் சனி லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். சனி உங்களுக்கு நண்பர். அவர் நல்லதுதான் செய்வார். அவர் விரைய சனியாக வந்து மகரம் ராசியில் அமர்கிறார்.

சனி பகவான் ஏழரை சனியாக அமர்ந்தாலும் நல்லது செய்வார். உங்களுக்கு 2020ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்களம்தான். தொட்டது எல்லாம் வெற்றிதான் காரணம் லாப ஸ்தானத்தில் சனி, குரு, கேது சஞ்சரிக்கின்றனர்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏழரை சனி காலமாக இருந்தாலும் குருவை நம்பி பாரத்தை இறக்கி வைத்து விடலாம்.

நேர்மையும் நம்பிக்கையும் முக்கியம். குருவின் பார்வையால் திருமண யோகம், புத்திரபாக்கிய யோகம் வரப்போகிறது. புது வீடு கட்ட ஆரம்பிக்கலாம். இடம் வாங்குவீர்கள் சனி பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான மீனத்தை பார்ப்பது சிறப்பு.

ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும் பொற்காலம்னே சொல்லலாம். நிறைய நல்லது நடக்கும். வெளிநாடு சுற்றுலா போவீங்க. மனசுக்கு பிடிச்ச மாதிரி நிறைய நல்ல காரியங்கள் நடக்கும் ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. சிங்கிள்ஸ் ஆ இருக்கவங்களுக்கு குடும்பத்தில மிங்கிள் ஆவீங்க. காதல் வரலாம். தினம் தினம் திருநாள்தான் உங்களுக்கு.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வெளிநாடு பயணம் வேலை விசயமாக போவீங்க. படிக்கும் மாணவர்கள் வேலைக்காக வெளியூர் வெளிநாடு போவீங்க. திருமணங்கள் நடக்கும். பணம் தாராளமாக வரும்.

அபரிமிதமாக இருக்கும் செலவைப் பற்றி கவலைப்படவே மாட்டீங்க. உடல் ஆரோக்கியத்தில அவ்வப்போது அக்கறை காட்டுங்க. சாப்பாட்டு விசயத்தில சத்தானதா சாப்பிடுங்க நேரத்திற்கு சாப்பிடுங்கள். ராகு கேது பெயர்ச்சியும் நல்லா இருக்கு கேது பத்தாம் வீட்டிற்கும் ராகு நான்காம் வீட்டிற்கும் வருவது சிறப்பு.

உங்க தொழில் நல்லா இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும். ஊதாரித்தனமாக செலவு பண்ணக்கூடாது.

பணம் அதிகமாக இருந்தாலே செலவு பண்ண தோணும் எதையும் நம்பி ஆழமாக கால வைக்காதீங்க நஷ்டம்தான் வரும் எச்சரிக்கையாக இருக்கணும். பணத்தை பத்திரப்படுத்துங்க. மொத்தத்தில ஆலய தரிசனம் மனதை அலைபாய விடாது 2020ஆம் ஆண்டு ரொம்ப அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.

மீனம்
2020ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான அதிசயங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. உங்க ராசி நாதன் குருவும் சனியும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஜனவரி முதல் மார்ச் வரை கால கட்டத்தில் தொழிலில் அற்புதமாக இருக்கும்.

பிசினஸ் செய்பவர்களுக்கு நிதி நெருக்கடிகள் தீரும். ஜனவரி இறுதியில் சனி பெயர்ச்சியாக லாப ஸ்தானத்திற்கு வருவது சிறப்பு. சொத்துக்கள் வாங்குவீங்கள்.

வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். வேலையில் கவனமாக இருக்கணும். புரமோசன் வரலையேன்னு கவலைப்படாதீங்க நல்லது சீக்கிரம் நடக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை பண விசயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

திருமணம் நடக்கும் காரணம் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருப்பது சிறப்பு. குரு அதிசாரத்தில் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பண வருவாயை அதிகப்படுத்துவார்.

தொழில், வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீங்க. மன உறுதியோடு இருங்க தைரியமும் தன்னம்பிக்கையும் அவசியம் வேண்டும். நம்மால முடியுமான்னு சந்தேகம் வேண்டாம் நல்லதாகவே நடக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் நிறைய நல்லதாகவே நடக்கும். வங்கி கடன் கிடைக்கும். தொழில் விசயங்களில் பணவரவு நன்றாக இருக்கும்.

குடும்பம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மன ஆரோக்கியமும் நல்லா இருக்கும் நிம்மதியாக உறக்கம் வரும்.

பத்தாம் வீட்டிற்கு குரு திரும்ப வரும் போது பண விவகாரங்களின் கொஞ்சம் தொய்வு ஏற்படும். ராகு கேது பெயர்ச்சி ரொம்ப நல்லா இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் தொழில் வியாபாரம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சியடையும்.

கேது ஒன்பதாம் வீட்டிலும் ராகு மூன்றாம் வீட்டிலும் இருப்பது சிறப்பு. இதே கால கட்டத்தில் குருவும் பெயர்ச்சியாகி லாப ஸ்தானத்திற்கு வந்து விடுவார் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்க காத்திருக்கிறது.

மீன ராசிக்காரர்கள் 2020ஆம் ஆண்டை ரொம்ப சந்தோஷத்தோடு வரவேற்க தயாராகுங்கள்.