இலங்கை தமிழை வைத்து பிடிப்பட்டார்! விமான நிலையத்தில் நடந்தது என்ன?

போலி பாஸ்போர்ட் மூலம் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லவிருந்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் மன்னாரை சேர்ந்தவர் ராபிக்ராபர்ட். இவர் கடந்த 1983ஆம் ஆண்டு தனது பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தார்.

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் ராபிக்ராபர்ட் தங்கியிருந்தார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்துக்கு ராபிக்ராபர்ட் வந்தார்.

அங்கிருந்து அவர் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதாவது, குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணையில் ராபின்ராபர்ட் பேசும் இலங்கை தமிழை வைத்து பிடிப்பட்டார் என தெரியவந்துள்ளது.