முல்லைத்தீவு வாழ் இளைஞர் யுவதிகளுக்கான வேண்டுகோள்!

முல்லைத்தீவு:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் யோசனைக்கமைய நாடளாவிய ரீதியாக பல்வேறு மாவட்டங்களில் தங்கள் மாவட்டத்தை அழகுபடுத்தும் நோக்கோடு இளைஞர் குழுக்கள் இணைந்து வர்ணம் பூசும் வேலைகளை செய்து வருகின்றனர்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர், யுவதிகள் ஒன்று சேர்ந்து வர்ணம் பூசும் பணிகளை ஆரம்பிக்க உள்ளனர்.

அந்தவகையில் சுவரோவியங்கள் வரைய ஆர்வமுள்ள இளைஞர்களை இன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு புது பேருந்து தரிப்பிடத்துக்கு அண்மையில் இருக்கிற பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு (CO-OP City) அருகாமையில் ஒன்று கூடி தமது ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டை வண்ணமயமாக்கும் செயற்திட்டமான சுவரோவியங்கள் வரைதல் நாடு முழுவதும் நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது.