சுவர் ஓவியங்கள்!

ஜனாதிபதி கோட்டாபயவின் எண்ணக்கருவுக்கு அமைய வண்ணமயமான நகரங்கள் திட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முழுவதிலும் உள்ள சுவர்களில் ஓவியங்களை வரைவதில் இளஞர்கள், யுவதிகள் மற்றும் கலைஞர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தெற்கில் வரையப்படும் சுவர் ஓவியங்களில் படையினரின் வெற்றியை பறை சாற்றுவதாக அந்த ஓவியங்கள் வரைப்படுகின்றன.

எனினும் வடக்கு கிழக்கில் தமிழர்களின் பாரம்பரியங்களையும், வரலாறுகளையும், ஒன்றுமைகளையும் நிலை நாட்டும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திருகோணமலை சிவன்கோவிலடியில் இளைஞர்களால் வரையப்பட்ட பத்துத்தலை இராவணனின் சுவர் ஓவியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.






